Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி

Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி post thumbnail image

உலகின் மிக முக்கிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது மகன் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடைபேற இருக்கிறது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

adhani family

அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்வையிட்ட கௌதம் அதானி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியப்போது, ” எனது மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எங்கள் வீட்டு நிகழ்ச்சி சாதாரண மக்கள் வீடுகளில் நடைபெறுவது போலவே இருக்கும். நான் கங்கை அன்னையின் ஆசிர்வாதத்தைப் பெற இங்கு வந்தேன். ஜீத்தின் திருமணம் மிகவும் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும், அது எளிமையான முறையிலும் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

adhani family

ஜீத் அதானியின் திருமணம் பிரபலங்கள் முன்னிலையில் நட்சத்திரங்கள் நிறைந்த திருமணமாக இருக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்த கௌதம் அதானி, “அது அப்படி இருக்காது.” என்று கூறியிருக்கிறார்.

 உலகின் மிக முக்கிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது மகன் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடைபேற இருக்கிறது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. adhani familyஅம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்வையிட்ட கௌதம் அதானி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியப்போது, ” எனது மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.எங்கள் வீட்டு நிகழ்ச்சி சாதாரண மக்கள் வீடுகளில் நடைபெறுவது போலவே இருக்கும். நான் கங்கை அன்னையின் ஆசிர்வாதத்தைப் பெற இங்கு வந்தேன். ஜீத்தின் திருமணம் மிகவும் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும், அது எளிமையான முறையிலும் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். adhani familyஜீத் அதானியின் திருமணம் பிரபலங்கள் முன்னிலையில் நட்சத்திரங்கள் நிறைந்த திருமணமாக இருக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்த கௌதம் அதானி, “அது அப்படி இருக்காது.” என்று கூறியிருக்கிறார். 

Related Post