டிசம்பர் 5… இன்றிலிருந்து 2 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாள்களுக்கு முன்பு… அதாவது டிசம்பர் 17, 2021. ‘புஷ்பா 1’ வெளியான நாள். ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கு சினிமா உலகளவில் பேசப்பட்டு, கொண்டாடப்பட்டது ‘புஷ்பா’வைத்தான். பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், மாஸ் சீன்கள் எனப் பக்க்க்க்கா கமர்ஷியல் மசாலா என்டர்டெயினராக ‘புஷ்பா’ ஓர் புயலாக மாறி ஆரவாரமாகக் கரையைக் கடந்தது. இன்று மையம் கொண்டுள்ள ‘புஷ்பா 2’வின் தாக்கம் எப்படி இருக்கிறது? கள நிலவரம் என்ன? ஃப்ளவரா, ஃபையரா அல்லது வைல்ட் ஃபயரா ?
முதல் பாகம் முழுக்க தனக்கென அடையாளம் இல்லாதவராக, செஞ்சந்தன மரம் வெட்டி கடத்தல் செய்யும் கும்பலில் கூலியாளாக வேலைக்குச் செல்லும் புஷ்பராஜ், தன்னுடைய சாதுரியத்தாலும் சாமர்த்தியத்தனத்தாலும் செஞ்சந்தன மர கடத்தல் தொழிலின் சிம்மாசனத்தில் ஏறி எப்படி டானாக மாறுகிறார் என்பதைச் சொல்லிருப்பார்கள். மொத்தத்தில் புஷ்பராஜின் எழுச்சியே முதல் பாகம். ஆந்திர அரசியலையே மாற்றும் புஷ்பாவின் அதிகாரத்தின் உச்சம் என்ன, ஐ.பி.எஸ் அதிகாரி பன்வர் சிங் செகாவத்துக்கும் புஷ்பாவுக்குமான பகை என்னவானது, தன் அண்ணன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ஏக்கம் புஷ்பாவை என்ன ஆனது ஆகியவைதான் இரண்டாம் பாகம்.
Pushpa 2 poster
தன் ஆசை கணவன் புஷ்பாவும் ஆந்திர மாநில முதலமைச்சரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அதனை தங்கள் வீட்டில் மாட்டிப் பெருமைப்பட வேண்டும் என்பதும் காதல் மனைவி ஶ்ரீவள்ளியின் ஆசை. புஷ்பாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விஷயம். ஆனால், அன்று அது நடக்காமல் போக, சூடாகிறார் புஷ்பா. அதனால், தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் தனக்கு நெருக்கமான அமைச்சரை முதலமைச்சராக்கி தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுகிறார். இதுதான் ‘புஷ்பா 2’ படத்தின் முதல் பாதி. நீங்க நம்பலனாலும் இதுதான் நெசம் !
புஷ்பாவாக அல்லு அர்ஜுன்… செம ஸ்வாக், மாஸ், ஸ்டைல் எனத் திரை முழுக்க நிரம்பி இருக்கிறார். ஒற்றைத் தோளைத் தூக்கியபடியே இருக்கும் அவரது உடல் மொழி, ‘அடங்காதவன்டா’ எனத் தாடியை மணிக்கட்டால் நீவிக்கொடுக்கும் மேனரிஸம், அனல் பறக்கும் பன்ச் வசனங்கள், அசத்தலான டான்ஸ், ஆர்ப்பரிக்கும் ஸ்டன்ட் எனப் படம் முழுக்க அல்லு அர்ஜுனின் சாம்ராஜ்ஜியம்தான். ரொமான்ஸ், எமோஷன், மாஸ் என ஆல் ஏரியாவிலும் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார். பேன் இந்தியன் ஸ்டாராக தாண்டவமே ஆடியிருக்கிறார்.
ஶ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா ரசிக்க வைக்கிறார். ஊரையே கன்ட்ரோலில் வைத்திருக்கும் புஷ்பாவை கன்ட்ரோலில் வைத்திருக்கும் மனைவி. “புஷ்பானா பேர் கிடையாது ப்ராண்டு” என்று ராஷ்மிகா தன் கணவனுக்காகப் பேசும் இடம் சூப்பர். வெல்டன் ராஷ்!
‘கிஸ் கிஸ் கிஸுக்கு’ பாடல் பக்கா வைப் ! ஶ்ரீலீலா You nailed it! ஜகதீஷ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா, அஜய், ஜெகபதி பாபு, ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். முதல் பாகத்தின் இறுதியில் ஃபகத் பாசிலின் கேரக்டருக்கும் புஷ்பா கேரக்டருக்கும் சரிசமமான போட்டியோடு முடியும். ஆனால், இந்த பாகத்தில் புஷ்பா கேரக்டர் மேலோங்கி, இருவருக்குமான மோதல் ஒன் சைடராக இருப்பது மைனஸ். ஃபகத் கிடைக்கிற கேப்பில் ஸ்கோர் செய்தாலும் கதையில் இந்த கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்படாததால் ‘பாவம் ஃபகத்’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
Pushpa
கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் சுகுமார், இந்த முறை பிரமாண்டத்தையும் கையிலெடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் திரை முழுக்க அத்தனை நபர்கள் நிறைந்திருக்கிறார்கள். புஷ்பாவின் மாஸ் மொமன்டுகளை எழுதிய விதமும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் பக்கா டோலிவுட் மெட்டீரியல்!
ஆனால், திரைக்கதையில் சில பல சிக்கல்களும் லாஜிக் மீறல்களும் கேள்விகளும் வரிசைகட்டி நிற்கின்றன. முக்கியமாக, இரண்டாம் பாதியின் மையக்கதை, அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மாறுகிறது. அதே போல், பெரும்பாலான காட்சிகள் அதன் தேவையை முடித்தபின்னும், நீண்டுகொண்டே போகின்றன. இவ்வாறாகக் காட்சிகள் இரண்டாம் பாதியில் நிறைய இருப்பதால், அலுப்பு தட்டுகின்றன. ஆனாலும், புஷ்பாவின் கதாபாத்திர வடிவமைப்பும் மாஸ் காட்சிகளும் அந்த சிக்கல்களைப் பல இடங்களில் ஓவர்டேக் செய்துவிடுகின்றன.
இந்தி மார்கெட்டுக்காக பல விஷயங்கள் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். இது தேவையேயில்லை எனத் தோன்றும் பல இடங்கள் இரண்டாம் பாதியில் இருப்பது நெருடல்! படத்தின் தொடக்கத்தில் வரும் ஜப்பான் போர்ஷன் எதற்கென்றே தெரியவில்லை. பாடல்கள் இடம்பெறச் செய்த விதம், அதற்கு முன் வரும் வசனத்தில் அதற்கான குறியீடு ஆகியவை ‘ச்சால பாகுந்தி!’ மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்கள் ‘பின்றார்ல!’ என தம்ஸ் அப் காட்ட வைக்கின்றன. உதாரணத்திற்கு, ஹெலிக்காப்டரில் புஷ்பா போகும்போது பேசும் வசனம்.
‘புஷ்பா’விலிருந்து..
அல்லு அர்ஜுன் – சுகுமார் – தேவி ஶ்ரீ பிரசாத்… இது எப்போதும் ப்ளாக்பஸ்டர் காம்போ. ‘புஷ்பா 1’ படத்தில் பாடல்கள் அனைத்தும் படம் வெளிவரும் முன்பே சென்சேஷனானது. ஆனால், இந்த முறை முன்பு போல் ஈர்க்கவில்லை என்றாலும் படத்தில் பாடல்களைப் பார்க்கும்போது நம்மையே அறியாமல் வைபாக முடிகின்றன. ‘புஷ்பா புஷ்பா’, ‘கிஸிக்’, ‘சூடான’ ஆகியவை தேவி ஶ்ரீ பிரசாத்தின் டிரேட்மார்க்! வாழ்த்துகள் டி.எஸ்.பி! பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம். கூடுதல் பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸின் பங்கு எங்கெல்லாம் என்பதையும் உணர முடிகிறது.
படம் முழுக்க மிரோஸ்லா க்யூபா ப்ரோசக்கின் ஒளிப்பதிவு முந்தைய பாகத்தின் ஜோனிலிருந்து தவறவேயில்லை. ஆக்ஷன் காட்சிகளிலும் பாடல்களிலும் கேமரா விளையாடியிருக்கிறது. திரைக்கதையை தன் எடிட்டிங் மூலம் வேகமூட்டியிருக்கிறார் எடிட்டர் நவீன் நூலி. அவரிடம் இந்த காட்சிகள் எல்லாம் படத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் போல! இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சில காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன. அல்லு அர்ஜுன் தொடங்கி எல்லா கதாபாத்திரத்திற்கும் தீபாலி நூரின் ஆடை வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
சென்னையிலிருந்து ஆந்திராவுக்குப் போவது போல, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்வது எல்லாம் எப்படி என்பது புஷ்பராஜுக்கே வெளிச்சம்! மாஸ் மசாலா கமர்ஷியல் தெலுங்குப் படங்களில் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது என்ற மனநிலையும் இருந்தாலுமே இதில் இடம்பெற்ற சில ஆக்ஷன் காட்சிகள் நம்மைச் சோதிக்கின்றன. ஏமி சார் இதி ?
புஷ்பா 2
எந்த லாஜிக்கும் பார்க்காமல் பக்கா கமர்ஷியல் படம் பார்க்க விரும்புவோருக்கு ‘புஷ்பா 2’ நிச்சயமாக ஈர்க்கும். 3 மணி நேரம் படம் என்பதாலும், அதிக நேரம் அல்லு அர்ஜுனையே பார்த்துக்கொண்டிருந்ததாலும் படம் முடிந்து வெளியே வரும்போது நம்மையே அறியாமல் அவரைப் போல ஒரு பக்க தோளைத் தூக்கிக்கொண்டே வர நேரும் வாய்ப்பிருக்கிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ‘புஷ்பா 2’ ஓர் ராஜபோக விருந்து! ஆனால் மற்றவர்களுக்கு…
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
டிசம்பர் 5… இன்றிலிருந்து 2 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாள்களுக்கு முன்பு… அதாவது டிசம்பர் 17, 2021. ‘புஷ்பா 1’ வெளியான நாள். ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கு சினிமா உலகளவில் பேசப்பட்டு, கொண்டாடப்பட்டது ‘புஷ்பா’வைத்தான். பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், மாஸ் சீன்கள் எனப் பக்க்க்க்கா கமர்ஷியல் மசாலா என்டர்டெயினராக ‘புஷ்பா’ ஓர் புயலாக மாறி ஆரவாரமாகக் கரையைக் கடந்தது. இன்று மையம் கொண்டுள்ள ‘புஷ்பா 2’வின் தாக்கம் எப்படி இருக்கிறது? கள நிலவரம் என்ன? ஃப்ளவரா, ஃபையரா அல்லது வைல்ட் ஃபயரா ? முதல் பாகம் முழுக்க தனக்கென அடையாளம் இல்லாதவராக, செஞ்சந்தன மரம் வெட்டி கடத்தல் செய்யும் கும்பலில் கூலியாளாக வேலைக்குச் செல்லும் புஷ்பராஜ், தன்னுடைய சாதுரியத்தாலும் சாமர்த்தியத்தனத்தாலும் செஞ்சந்தன மர கடத்தல் தொழிலின் சிம்மாசனத்தில் ஏறி எப்படி டானாக மாறுகிறார் என்பதைச் சொல்லிருப்பார்கள். மொத்தத்தில் புஷ்பராஜின் எழுச்சியே முதல் பாகம். ஆந்திர அரசியலையே மாற்றும் புஷ்பாவின் அதிகாரத்தின் உச்சம் என்ன, ஐ.பி.எஸ் அதிகாரி பன்வர் சிங் செகாவத்துக்கும் புஷ்பாவுக்குமான பகை என்னவானது, தன் அண்ணன் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ஏக்கம் புஷ்பாவை என்ன ஆனது ஆகியவைதான் இரண்டாம் பாகம். Pushpa 2 posterதன் ஆசை கணவன் புஷ்பாவும் ஆந்திர மாநில முதலமைச்சரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அதனை தங்கள் வீட்டில் மாட்டிப் பெருமைப்பட வேண்டும் என்பதும் காதல் மனைவி ஶ்ரீவள்ளியின் ஆசை. புஷ்பாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விஷயம். ஆனால், அன்று அது நடக்காமல் போக, சூடாகிறார் புஷ்பா. அதனால், தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் தனக்கு நெருக்கமான அமைச்சரை முதலமைச்சராக்கி தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுகிறார். இதுதான் ‘புஷ்பா 2’ படத்தின் முதல் பாதி. நீங்க நம்பலனாலும் இதுதான் நெசம் ! புஷ்பாவாக அல்லு அர்ஜுன்… செம ஸ்வாக், மாஸ், ஸ்டைல் எனத் திரை முழுக்க நிரம்பி இருக்கிறார். ஒற்றைத் தோளைத் தூக்கியபடியே இருக்கும் அவரது உடல் மொழி, ‘அடங்காதவன்டா’ எனத் தாடியை மணிக்கட்டால் நீவிக்கொடுக்கும் மேனரிஸம், அனல் பறக்கும் பன்ச் வசனங்கள், அசத்தலான டான்ஸ், ஆர்ப்பரிக்கும் ஸ்டன்ட் எனப் படம் முழுக்க அல்லு அர்ஜுனின் சாம்ராஜ்ஜியம்தான். ரொமான்ஸ், எமோஷன், மாஸ் என ஆல் ஏரியாவிலும் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார். பேன் இந்தியன் ஸ்டாராக தாண்டவமே ஆடியிருக்கிறார்.ஶ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா ரசிக்க வைக்கிறார். ஊரையே கன்ட்ரோலில் வைத்திருக்கும் புஷ்பாவை கன்ட்ரோலில் வைத்திருக்கும் மனைவி. “புஷ்பானா பேர் கிடையாது ப்ராண்டு” என்று ராஷ்மிகா தன் கணவனுக்காகப் பேசும் இடம் சூப்பர். வெல்டன் ராஷ்!’கிஸ் கிஸ் கிஸுக்கு’ பாடல் பக்கா வைப் ! ஶ்ரீலீலா You nailed it! ஜகதீஷ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா, அஜய், ஜெகபதி பாபு, ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். முதல் பாகத்தின் இறுதியில் ஃபகத் பாசிலின் கேரக்டருக்கும் புஷ்பா கேரக்டருக்கும் சரிசமமான போட்டியோடு முடியும். ஆனால், இந்த பாகத்தில் புஷ்பா கேரக்டர் மேலோங்கி, இருவருக்குமான மோதல் ஒன் சைடராக இருப்பது மைனஸ். ஃபகத் கிடைக்கிற கேப்பில் ஸ்கோர் செய்தாலும் கதையில் இந்த கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்படாததால் ‘பாவம் ஃபகத்’ என்றே சொல்லத் தோன்றுகிறது. Pushpa கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் சுகுமார், இந்த முறை பிரமாண்டத்தையும் கையிலெடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் திரை முழுக்க அத்தனை நபர்கள் நிறைந்திருக்கிறார்கள். புஷ்பாவின் மாஸ் மொமன்டுகளை எழுதிய விதமும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் பக்கா டோலிவுட் மெட்டீரியல்!ஆனால், திரைக்கதையில் சில பல சிக்கல்களும் லாஜிக் மீறல்களும் கேள்விகளும் வரிசைகட்டி நிற்கின்றன. முக்கியமாக, இரண்டாம் பாதியின் மையக்கதை, அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மாறுகிறது. அதே போல், பெரும்பாலான காட்சிகள் அதன் தேவையை முடித்தபின்னும், நீண்டுகொண்டே போகின்றன. இவ்வாறாகக் காட்சிகள் இரண்டாம் பாதியில் நிறைய இருப்பதால், அலுப்பு தட்டுகின்றன. ஆனாலும், புஷ்பாவின் கதாபாத்திர வடிவமைப்பும் மாஸ் காட்சிகளும் அந்த சிக்கல்களைப் பல இடங்களில் ஓவர்டேக் செய்துவிடுகின்றன.இந்தி மார்கெட்டுக்காக பல விஷயங்கள் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். இது தேவையேயில்லை எனத் தோன்றும் பல இடங்கள் இரண்டாம் பாதியில் இருப்பது நெருடல்! படத்தின் தொடக்கத்தில் வரும் ஜப்பான் போர்ஷன் எதற்கென்றே தெரியவில்லை. பாடல்கள் இடம்பெறச் செய்த விதம், அதற்கு முன் வரும் வசனத்தில் அதற்கான குறியீடு ஆகியவை ‘ச்சால பாகுந்தி!’ மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்கள் ‘பின்றார்ல!’ என தம்ஸ் அப் காட்ட வைக்கின்றன. உதாரணத்திற்கு, ஹெலிக்காப்டரில் புஷ்பா போகும்போது பேசும் வசனம். ‘புஷ்பா’விலிருந்து..அல்லு அர்ஜுன் – சுகுமார் – தேவி ஶ்ரீ பிரசாத்… இது எப்போதும் ப்ளாக்பஸ்டர் காம்போ. ‘புஷ்பா 1’ படத்தில் பாடல்கள் அனைத்தும் படம் வெளிவரும் முன்பே சென்சேஷனானது. ஆனால், இந்த முறை முன்பு போல் ஈர்க்கவில்லை என்றாலும் படத்தில் பாடல்களைப் பார்க்கும்போது நம்மையே அறியாமல் வைபாக முடிகின்றன. ‘புஷ்பா புஷ்பா’, ‘கிஸிக்’, ‘சூடான’ ஆகியவை தேவி ஶ்ரீ பிரசாத்தின் டிரேட்மார்க்! வாழ்த்துகள் டி.எஸ்.பி! பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம். கூடுதல் பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸின் பங்கு எங்கெல்லாம் என்பதையும் உணர முடிகிறது.படம் முழுக்க மிரோஸ்லா க்யூபா ப்ரோசக்கின் ஒளிப்பதிவு முந்தைய பாகத்தின் ஜோனிலிருந்து தவறவேயில்லை. ஆக்ஷன் காட்சிகளிலும் பாடல்களிலும் கேமரா விளையாடியிருக்கிறது. திரைக்கதையை தன் எடிட்டிங் மூலம் வேகமூட்டியிருக்கிறார் எடிட்டர் நவீன் நூலி. அவரிடம் இந்த காட்சிகள் எல்லாம் படத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் போல! இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சில காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றன. அல்லு அர்ஜுன் தொடங்கி எல்லா கதாபாத்திரத்திற்கும் தீபாலி நூரின் ஆடை வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.சென்னையிலிருந்து ஆந்திராவுக்குப் போவது போல, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்வது எல்லாம் எப்படி என்பது புஷ்பராஜுக்கே வெளிச்சம்! மாஸ் மசாலா கமர்ஷியல் தெலுங்குப் படங்களில் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது என்ற மனநிலையும் இருந்தாலுமே இதில் இடம்பெற்ற சில ஆக்ஷன் காட்சிகள் நம்மைச் சோதிக்கின்றன. ஏமி சார் இதி ? புஷ்பா 2 எந்த லாஜிக்கும் பார்க்காமல் பக்கா கமர்ஷியல் படம் பார்க்க விரும்புவோருக்கு ‘புஷ்பா 2’ நிச்சயமாக ஈர்க்கும். 3 மணி நேரம் படம் என்பதாலும், அதிக நேரம் அல்லு அர்ஜுனையே பார்த்துக்கொண்டிருந்ததாலும் படம் முடிந்து வெளியே வரும்போது நம்மையே அறியாமல் அவரைப் போல ஒரு பக்க தோளைத் தூக்கிக்கொண்டே வர நேரும் வாய்ப்பிருக்கிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ‘புஷ்பா 2’ ஓர் ராஜபோக விருந்து! ஆனால் மற்றவர்களுக்கு…நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…https://bit.ly/ParthibanKanavuAudioBook