கிங் ஷாருக்கானுக்கு 59-வது பிறந்தநாள் இன்று!
பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிகத்தைப் பற்றி பல பேட்டிகளிலும் பார்த்தும், பல கட்டுரைகளிலும் படித்தும் தெரிந்திருப்போம். அப்படியான சவால் மிகுந்த களத்தில் போராடி இன்று பாலிவுட்டின் முகமாக உருவெடுத்திருக்கிறார் ஷாருக். உயரிய கனவுகளுடன் குடும்பத்தின் பொறுப்புகளை சுமந்து பம்பரமாய் சுற்றும் பல இளைஞர்களை போன்ற வாழ்க்கைதான் ஷாருக் கானுக்கும் தொடக்கத்தில் இருந்தது.
பள்ளி காலத்தில் ஹாக்கி மற்றும் ஃபுட்பால் விளையாடுவதிலும்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சொல்லப்போனால் அதன் மூலமாக தனது கரியரை அமைத்துக் கொள்ளவும் விரும்பினர். ஆனால், வாழ்க்கையின் யதார்த்தம் அவரை வேறு ஒரு களத்திற்கு அழைத்து வந்தது. பள்ளிக் காலத்தில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால்தான் அவரால் தொடர்ந்து விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை. அதனையடுத்து மேடை நாடகங்களிலும் ஈடுபட தொடங்கினார். அவரின் ஃபேவரைட் பாலிவுட் நடிகர்களான தீலிப் குமார் மற்றும் அமிதாப் பச்சன்தான் மறைமுகமாக ஷாருக் கானின் கரியருக்கு விதை போட்டார்கள்.
Shah Rukh Khan
ஆம், அச்சு அசலாக இந்த நடிகர்களை போலவே மேடை நாடகங்களில் நடித்துதான் முதலில் கைதட்டல்களையும் விசில் சத்தங்களையும் அள்ளினார். மக்களிடம் நீக்கமற இடத்தை பிடித்திருந்த இவர்கள் இருவரை போலவே ஷாருக் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்ததால் மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு கொண்டாடினார்கள். கல்லூரியில் பொருளாதாரம் இளங்கலை பட்டம் பயிலும்போதும் தனது பெரும்பாலான நேரத்தை `TAG’ எனப்படும் டெல்லி தியேட்டர் ஆக்ஷன் குழுவில்தான் செலவிட்டார்.
தேசிய நாடகப் பள்ளியில் இவரின் தந்தை கேண்டீன் ஒன்றை நடத்தி வந்தார். தொடர்ந்து தந்தையுடன் கேண்டீனுக்கு செல்வதின் மூலமாக அங்கு சில நடிகர்களின் நட்பும் ஷாருக் கானுக்கு கிடைத்தது. பிறகு, அவரும் இந்தப் பள்ளியில் நடிப்பு கற்றுக் கொண்டார். இதற்கிடையில் ஷாருக் கானுக்கு 15 வயது இருக்கும்போது அவரின் தந்தை புற்றுநோயால் காலமானார். அதன் பிறகு ஷாருக் கானின் தாயார் குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.
இப்படியான மேடை நாடகங்களின் மூலம் ஷாருக் கானுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் லேக் தாதுன் இயக்கத்தில் ஒளிபரப்பான `தில் தரியா’ என்ற நாடகத்தில் 1988-ல் நடிக்க தொடங்கினார். ஆனால் இந்த சீரியல் ஒளிபரப்பாக தாமதமானது. இரண்டாவதாக இவர் ராஜ்குமார் கபூர் இயக்கத்தில் நடித்த `பௌஜி’ நாடகம்தான் முதலில் ஒளிபரப்பானது. பிறகு, `சர்கஸ்’, `தூசரா கெவால்’ போன்ற சீரியல்கள் இவரை இன்னும் மக்கள் மத்தியில் அதிகமாக பரிச்சயமாக்கியது. இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு தொடக்கத்தில் கிடைத்த அதே எதிர்மறையான விமர்சனங்கள் ஷாருக் கானுக்கும் வந்தது.
Shah Rukh Khan
பல மேடை நாடகங்களில் பாலிவுட் நடிகர் திலீப் குமாரைப் போல தொடர்ந்து நடித்ததால் அவரின் அம்சங்கள் அனைத்தும் ஷாருக்கிடம் ஒட்டிக் கொண்டது. இவர் சீரியலில் நடிக்கும்போதும் அவரைப் போலவே இருக்கிறார் என மக்களிடம் விமர்சனம் எழுந்தது. சீரியலில் களமிறங்கும் பெரும்பாலானோருக்கு சினிமாதான் அவர்களின் கனவாக இருக்கும். ஆனால், ஷாருக் இதற்கு அப்படியே நேர் எதிரான எண்ணத்தைக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் படங்களில் நடிப்பதற்கு அவருக்கு ஆர்வமில்லை. அந்த இடத்தை அவர் விரும்பவும் இல்லை. இதன் பிறகுதான் ஷாருக் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது….
1990-ல் ஷாருக் கானின் தாயார் காலமானார். 15 வயதிலேயே தந்தையை இழந்த துக்கத்திலிருந்து கடந்து வர முடியாத ஷாருக் கானுக்கு மீள முடியாத சோகத்தை தாயாரின் மறைவு கொடுத்தது. இவரின் தாயாருக்கு ஷாருக் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. தாயாரின் மறைவுக்குப் பிறகு சகோதரியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு ஒரு புறமும் தயாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கை மற்றொரு புறமும் இருந்தது. தனது நண்பரான நடிகர் விவேக் விஸ்வானி உதவியுடன் சினிமா ஆசையோடு மும்பைக்கு வந்தார்.
Shah Rukh Khan
ஷாருக் கான் சொந்தமாக வீடும் வாங்கும் வரை இந்த விவேக் விஸ்வானி வீட்டில்தான் தங்கியிருக்கிறார். இதே நண்பரின் மூலமாத்தான் இவர் வாழ்க்கையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆம், இவர் மூலமாகத்தான் ஷாருக் கானுக்கு முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்து. முதல் வாய்ப்பை எக்காரணத்திற்காகவும் தவறவிட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாக நினைவில் கொண்டு முதல் படத்திலேயே தன்னை நிரூபித்துக் கொண்டார். பிறகு வில்லனாக உருவெடுத்தவர் ரொமான்ட்டிக் ஹீரோவாகவும் பலரின் க்ரஷ் லிஸ்டில் இடம் பிடித்தார்.
அந்த ரெமான்ட்டிக் பாய்தான் இன்று பாலிவுட்டின் முகமாக இருக்கிறார்…. இருப்பார்!
`He is the face of Bollywood!’Exclusive: ரஜினிகாந்தும் பாபாஜி குகையும் – ரசிகராக மாறிய மலைகிராம டீக்கடைக்காரர் கிங் ஷாருக்கானுக்கு 59-வது பிறந்தநாள் இன்று!பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிகத்தைப் பற்றி பல பேட்டிகளிலும் பார்த்தும், பல கட்டுரைகளிலும் படித்தும் தெரிந்திருப்போம். அப்படியான சவால் மிகுந்த களத்தில் போராடி இன்று பாலிவுட்டின் முகமாக உருவெடுத்திருக்கிறார் ஷாருக். உயரிய கனவுகளுடன் குடும்பத்தின் பொறுப்புகளை சுமந்து பம்பரமாய் சுற்றும் பல இளைஞர்களை போன்ற வாழ்க்கைதான் ஷாருக் கானுக்கும் தொடக்கத்தில் இருந்தது.பள்ளி காலத்தில் ஹாக்கி மற்றும் ஃபுட்பால் விளையாடுவதிலும்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சொல்லப்போனால் அதன் மூலமாக தனது கரியரை அமைத்துக் கொள்ளவும் விரும்பினர். ஆனால், வாழ்க்கையின் யதார்த்தம் அவரை வேறு ஒரு களத்திற்கு அழைத்து வந்தது. பள்ளிக் காலத்தில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால்தான் அவரால் தொடர்ந்து விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை. அதனையடுத்து மேடை நாடகங்களிலும் ஈடுபட தொடங்கினார். அவரின் ஃபேவரைட் பாலிவுட் நடிகர்களான தீலிப் குமார் மற்றும் அமிதாப் பச்சன்தான் மறைமுகமாக ஷாருக் கானின் கரியருக்கு விதை போட்டார்கள். Shah Rukh Khanஆம், அச்சு அசலாக இந்த நடிகர்களை போலவே மேடை நாடகங்களில் நடித்துதான் முதலில் கைதட்டல்களையும் விசில் சத்தங்களையும் அள்ளினார். மக்களிடம் நீக்கமற இடத்தை பிடித்திருந்த இவர்கள் இருவரை போலவே ஷாருக் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்ததால் மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு கொண்டாடினார்கள். கல்லூரியில் பொருளாதாரம் இளங்கலை பட்டம் பயிலும்போதும் தனது பெரும்பாலான நேரத்தை `TAG’ எனப்படும் டெல்லி தியேட்டர் ஆக்ஷன் குழுவில்தான் செலவிட்டார். தேசிய நாடகப் பள்ளியில் இவரின் தந்தை கேண்டீன் ஒன்றை நடத்தி வந்தார். தொடர்ந்து தந்தையுடன் கேண்டீனுக்கு செல்வதின் மூலமாக அங்கு சில நடிகர்களின் நட்பும் ஷாருக் கானுக்கு கிடைத்தது. பிறகு, அவரும் இந்தப் பள்ளியில் நடிப்பு கற்றுக் கொண்டார். இதற்கிடையில் ஷாருக் கானுக்கு 15 வயது இருக்கும்போது அவரின் தந்தை புற்றுநோயால் காலமானார். அதன் பிறகு ஷாருக் கானின் தாயார் குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.இப்படியான மேடை நாடகங்களின் மூலம் ஷாருக் கானுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் லேக் தாதுன் இயக்கத்தில் ஒளிபரப்பான `தில் தரியா’ என்ற நாடகத்தில் 1988-ல் நடிக்க தொடங்கினார். ஆனால் இந்த சீரியல் ஒளிபரப்பாக தாமதமானது. இரண்டாவதாக இவர் ராஜ்குமார் கபூர் இயக்கத்தில் நடித்த `பௌஜி’ நாடகம்தான் முதலில் ஒளிபரப்பானது. பிறகு, `சர்கஸ்’, `தூசரா கெவால்’ போன்ற சீரியல்கள் இவரை இன்னும் மக்கள் மத்தியில் அதிகமாக பரிச்சயமாக்கியது. இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு தொடக்கத்தில் கிடைத்த அதே எதிர்மறையான விமர்சனங்கள் ஷாருக் கானுக்கும் வந்தது. Shah Rukh Khanபல மேடை நாடகங்களில் பாலிவுட் நடிகர் திலீப் குமாரைப் போல தொடர்ந்து நடித்ததால் அவரின் அம்சங்கள் அனைத்தும் ஷாருக்கிடம் ஒட்டிக் கொண்டது. இவர் சீரியலில் நடிக்கும்போதும் அவரைப் போலவே இருக்கிறார் என மக்களிடம் விமர்சனம் எழுந்தது. சீரியலில் களமிறங்கும் பெரும்பாலானோருக்கு சினிமாதான் அவர்களின் கனவாக இருக்கும். ஆனால், ஷாருக் இதற்கு அப்படியே நேர் எதிரான எண்ணத்தைக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் படங்களில் நடிப்பதற்கு அவருக்கு ஆர்வமில்லை. அந்த இடத்தை அவர் விரும்பவும் இல்லை. இதன் பிறகுதான் ஷாருக் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது….1990-ல் ஷாருக் கானின் தாயார் காலமானார். 15 வயதிலேயே தந்தையை இழந்த துக்கத்திலிருந்து கடந்து வர முடியாத ஷாருக் கானுக்கு மீள முடியாத சோகத்தை தாயாரின் மறைவு கொடுத்தது. இவரின் தாயாருக்கு ஷாருக் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. தாயாரின் மறைவுக்குப் பிறகு சகோதரியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு ஒரு புறமும் தயாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கை மற்றொரு புறமும் இருந்தது. தனது நண்பரான நடிகர் விவேக் விஸ்வானி உதவியுடன் சினிமா ஆசையோடு மும்பைக்கு வந்தார். Shah Rukh Khanஷாருக் கான் சொந்தமாக வீடும் வாங்கும் வரை இந்த விவேக் விஸ்வானி வீட்டில்தான் தங்கியிருக்கிறார். இதே நண்பரின் மூலமாத்தான் இவர் வாழ்க்கையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆம், இவர் மூலமாகத்தான் ஷாருக் கானுக்கு முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்து. முதல் வாய்ப்பை எக்காரணத்திற்காகவும் தவறவிட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாக நினைவில் கொண்டு முதல் படத்திலேயே தன்னை நிரூபித்துக் கொண்டார். பிறகு வில்லனாக உருவெடுத்தவர் ரொமான்ட்டிக் ஹீரோவாகவும் பலரின் க்ரஷ் லிஸ்டில் இடம் பிடித்தார். அந்த ரெமான்ட்டிக் பாய்தான் இன்று பாலிவுட்டின் முகமாக இருக்கிறார்…. இருப்பார்!`He is the face of Bollywood!’Exclusive: ரஜினிகாந்தும் பாபாஜி குகையும் – ரசிகராக மாறிய மலைகிராம டீக்கடைக்காரர்