`அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகி வெளியாகியிருக்கிறது. முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் களமிறங்கியிருக்கிறார். மிடுக்கான ராணுவ உடையுடன் உடல் எடையை அதிகப்படுத்தி ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் எஸ்.கே. `அமரன்’ படத்தைப் போல ராணுவத்தை மையப்படுத்திய சிறந்த சில திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆல் குவைட் ஆன் வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All quiet on western front):
`1929′ எனப்படும் நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவானது. இந்த நாவலை மையப்படுத்தி உருவான மூன்றாவது திரைப்படம் இது. இதே தலைப்பில் 1930-லும், 1979-லும் இரண்டு வெர்ஷன்கள் வெளியாகியிருக்கிறது. 2022-ம் ஆண்டு இதன் மூன்றாவது வெர்ஷன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் உலகப் போரை மையப்படுத்தி போருக்கு எதிரான மெசேஜ் பேசியது இந்த திரைப்படம். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
All quiet on western front and full metal jacket
ஃபுல் மெட்டல் ஜாக்கெட் (Full metal jacket):
இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் உருவாகி 1987-ல் வெளியான `ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வியட்நாம் போருக்கு ராணுவ வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பது முதல் தொடங்கி ராணுவத்தின் பல பக்கங்களை இத்திரைப்படம் பேசும். 1979-ல் வெளியான `தி ஷார்ட் டைமர்ஸ்’ எனப்படும் பயோகிராபி நாவலை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருந்தார் ஸ்டான்லி குப்ரிக்.
சேவிங் ப்ரைவேட் ரையன் ( Saving private ryan):
ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் இயக்கத்தில் உருவாகி 1988-ல் வெளியான `சேவிங் ப்ரைவேர் ரையன்’ திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு வந்த பல ராணுவ திரைப்படங்களையெல்லாம் எடுப்பதற்கு இந்தப் படம் இன்ஸ்பயர் செய்திருக்கிறதாம். இதனை பல பேட்டிகளில் பல இயக்குநர்களும் கூறியிருக்கிறார்கள். போர் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தின் நுட்பங்களை இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.
Saving private ryan & ryan
ஃப்யூரி (Fury):
பிராட் பிட் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான `ஃப்யூரி’ திரைப்படத்தை இயக்குநர் டேவிட் ஐயர் இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அமெரிக்காவின் டேங்கரிகளில் நாஜிகளுக்கு எதிராக சண்டையிட்ட ராணுவ அதிகாரிகளை மையப்படுத்தியது இந்தப் படம். இந்தப் படத்தின் இயக்குநர் டேவிட் ஐயரின் குடும்பத்தினர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ராணுவம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஷெர்ஷா (Shershah):
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் பயோகிராபியாக உருவாகியிருந்தது. நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா விக்ரம் பத்ராவாக களமிறங்கியிருந்தார். இத்திரைப்படம் 7 தேசிய விருதுகளை வென்றது.
Shershah & Uri Surgical Strike
உரி – சர்ஜிகல் ஸ்டைர்க் (Uri- Surgical Strike):
பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் வெளியான சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2016-ம் ஆண்டு நிகழ்ந்த உரி தாக்குதலை மையப்படுத்தி எடுத்திருந்தார் இயக்குநர் ஆதித்ய தார். மக்களின் வரவேற்பு மட்டுமல்ல தேசிய விருதும் இத்திரைப்படத்திற்கு கிடைத்தது.
இதுபோல… உங்களுக்குப் பிடித்த ராணுவம் சார்ந்த படங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
Amaran : மேஜர் முகுந்தைக் காக்க முன்னின்று மாண்ட வீரன்… சிப்பாய் விக்ரம் சிங் பற்றி தெரியுமா? `அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகி வெளியாகியிருக்கிறது. முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் களமிறங்கியிருக்கிறார். மிடுக்கான ராணுவ உடையுடன் உடல் எடையை அதிகப்படுத்தி ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் எஸ்.கே. `அமரன்’ படத்தைப் போல ராணுவத்தை மையப்படுத்திய சிறந்த சில திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.ஆல் குவைட் ஆன் வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All quiet on western front):`1929′ எனப்படும் நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவானது. இந்த நாவலை மையப்படுத்தி உருவான மூன்றாவது திரைப்படம் இது. இதே தலைப்பில் 1930-லும், 1979-லும் இரண்டு வெர்ஷன்கள் வெளியாகியிருக்கிறது. 2022-ம் ஆண்டு இதன் மூன்றாவது வெர்ஷன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் உலகப் போரை மையப்படுத்தி போருக்கு எதிரான மெசேஜ் பேசியது இந்த திரைப்படம். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. All quiet on western front and full metal jacketஃபுல் மெட்டல் ஜாக்கெட் (Full metal jacket):இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் உருவாகி 1987-ல் வெளியான `ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வியட்நாம் போருக்கு ராணுவ வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பது முதல் தொடங்கி ராணுவத்தின் பல பக்கங்களை இத்திரைப்படம் பேசும். 1979-ல் வெளியான `தி ஷார்ட் டைமர்ஸ்’ எனப்படும் பயோகிராபி நாவலை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருந்தார் ஸ்டான்லி குப்ரிக்.சேவிங் ப்ரைவேட் ரையன் ( Saving private ryan):ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் இயக்கத்தில் உருவாகி 1988-ல் வெளியான `சேவிங் ப்ரைவேர் ரையன்’ திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்திரைப்படத்திற்குப் பிறகு வந்த பல ராணுவ திரைப்படங்களையெல்லாம் எடுப்பதற்கு இந்தப் படம் இன்ஸ்பயர் செய்திருக்கிறதாம். இதனை பல பேட்டிகளில் பல இயக்குநர்களும் கூறியிருக்கிறார்கள். போர் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இத்திரைப்படத்தின் நுட்பங்களை இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.Saving private ryan & ryanஃப்யூரி (Fury):பிராட் பிட் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான `ஃப்யூரி’ திரைப்படத்தை இயக்குநர் டேவிட் ஐயர் இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் அமெரிக்காவின் டேங்கரிகளில் நாஜிகளுக்கு எதிராக சண்டையிட்ட ராணுவ அதிகாரிகளை மையப்படுத்தியது இந்தப் படம். இந்தப் படத்தின் இயக்குநர் டேவிட் ஐயரின் குடும்பத்தினர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ராணுவம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.ஷெர்ஷா (Shershah):இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் பயோகிராபியாக உருவாகியிருந்தது. நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா விக்ரம் பத்ராவாக களமிறங்கியிருந்தார். இத்திரைப்படம் 7 தேசிய விருதுகளை வென்றது.Shershah & Uri Surgical Strikeஉரி – சர்ஜிகல் ஸ்டைர்க் (Uri- Surgical Strike):பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் வெளியான சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2016-ம் ஆண்டு நிகழ்ந்த உரி தாக்குதலை மையப்படுத்தி எடுத்திருந்தார் இயக்குநர் ஆதித்ய தார். மக்களின் வரவேற்பு மட்டுமல்ல தேசிய விருதும் இத்திரைப்படத்திற்கு கிடைத்தது. இதுபோல… உங்களுக்குப் பிடித்த ராணுவம் சார்ந்த படங்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!Amaran : மேஜர் முகுந்தைக் காக்க முன்னின்று மாண்ட வீரன்… சிப்பாய் விக்ரம் சிங் பற்றி தெரியுமா?