இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாகவும் பேசியிருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், நடிகை சாய் பல்லவி – நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன். ரசிகர்களால் வரவேற்கப்படும் இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியதாக Raaj Kamal Films International தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் – ரஜினி
இது தொடர்பாக அந்த நிறுவனம் தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Sai Pallavi: புறக்கணிப்பு, விமர்சனம் கடந்த வெற்றி; சாய் பல்லவியின் சினிமா பயணம் – விரிவான பார்வை இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாகவும் பேசியிருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், நடிகை சாய் பல்லவி – நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன். ரசிகர்களால் வரவேற்கப்படும் இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியதாக Raaj Kamal Films International தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.சிவகார்த்திகேயன் – ரஜினிஇது தொடர்பாக அந்த நிறுவனம் தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.Sai Pallavi: புறக்கணிப்பு, விமர்சனம் கடந்த வெற்றி; சாய் பல்லவியின் சினிமா பயணம் – விரிவான பார்வை