சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். கமல்ஹாசனுக்கு தொலைப்பேசி மூலம் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். தவிர ‘அமரன்’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.
அமரன்
இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் ரஜினிகாந்த், ” நேற்றுதான் ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் அமரன் படத்தைப் பார்த்தேன். கமல் ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் அது கம்மிதான். முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை தயாரிக்க முன் வந்ததற்காக முதலில் அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். அந்தப் படத்தை நினைத்ததைவிட ராஜ்குமார் நன்றாக இயக்கி இருக்கிறார். நிறைய பேர் ராணுவத்தைப் பற்றி எடுத்திருக்கிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு யாரும் எடுத்ததில்லை.
ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் கரியரிலேயே மிகச் சிறந்தப்படம் இதுதான். முகுந்த் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். சாய் பல்லவியும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் முடியும்போது என்னால் அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படமாகவும் இருந்தது.
ரஜினி , சிவகார்த்திகேயன்
என்னுடைய இரண்டாவது அண்ணா 14 வருஷம் ராணுவத்தில்தான் இருந்தார். சீனா வாரின்போது அவர் அதில் பணியாற்றி இருந்தார். எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். இப்படி ஒரு படத்தை உருவாக்கிய படக்குழுவினருக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுக்கள். இந்தியன் என்ற உணர்வு வரும். நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் ” என்று மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’.இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். கமல்ஹாசனுக்கு தொலைப்பேசி மூலம் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். தவிர ‘அமரன்’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.அமரன் இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் ரஜினிகாந்த், ” நேற்றுதான் ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் அமரன் படத்தைப் பார்த்தேன். கமல் ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் அது கம்மிதான். முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை தயாரிக்க முன் வந்ததற்காக முதலில் அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். அந்தப் படத்தை நினைத்ததைவிட ராஜ்குமார் நன்றாக இயக்கி இருக்கிறார். நிறைய பேர் ராணுவத்தைப் பற்றி எடுத்திருக்கிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு யாரும் எடுத்ததில்லை.ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் கரியரிலேயே மிகச் சிறந்தப்படம் இதுதான். முகுந்த் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். சாய் பல்லவியும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் முடியும்போது என்னால் அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படமாகவும் இருந்தது.ரஜினி , சிவகார்த்திகேயன் என்னுடைய இரண்டாவது அண்ணா 14 வருஷம் ராணுவத்தில்தான் இருந்தார். சீனா வாரின்போது அவர் அதில் பணியாற்றி இருந்தார். எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். இப்படி ஒரு படத்தை உருவாக்கிய படக்குழுவினருக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுக்கள். இந்தியன் என்ற உணர்வு வரும். நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் ” என்று மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX