”பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் அவர்தான்!” – பிரேம்ஜி மனைவி இந்து பேட்டி

”பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா ஆரம்பிக்க காரணம் அவர்தான்!” – பிரேம்ஜி மனைவி இந்து பேட்டி post thumbnail image

நடிகர் பிரேம்ஜி திருமணம் முடிந்து ரீல்ஸ்களால் சுவாரஸ்யப்படுத்திக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், ‘பிரேம்ஜி மாமியார் மசாலா’ என பாரம்பர்ய முறையில் வீட்டிலேயே மசாலா தயாரிப்பை பிரேம்ஜியின் மனைவி இந்துவும் மாமியார் ஷர்மிளாவும் ஆரம்பித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் மசாலா பாக்கெட்டுகளில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கெமிக்கல்கள் கலந்திருப்பதாக சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பரபரப்பான சூழலில், பாரம்பர்ய முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் கலப்படம் இல்லாத மசாலா பொருட்கள் மீது மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளாவும் மனைவி இந்துவும் இணைந்து மசாலா தயாரிப்பை ஆரம்பித்துள்ளது குறித்து பிரேம்ஜியின் மனைவி மற்றும் மாமியாரிடமும் பேசினேன்.

பிரேம்ஜி – இந்து

முதலில் பேசிய பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா, “எங்களோட சொந்த ஊர் சேலம். பெரிய விவசாய கூட்டுக்குடும்பம். சமையலுக்கு மிளகாய்த்தூள், மசாலாவுக்கெல்லாம் வெளியில வாங்கவே மாட்டோம். விவசாய குடும்பம்ங்கிறதால நாங்களே உற்பத்தி செஞ்சு, நாங்களே தயாரிச்சிடுவோம். எங்க மாமியார் ரொம்ப சூப்பரா குழம்பு மசாலாவை ரெடி பண்ணுவாங்க. எங்க சொந்தக்காரங்க எல்லோருக்குமே என் மாமியார் செய்யுற மசாலா ரொம்ப பிடிக்கும். எல்லோருமே அவங்கக்கிட்ட அரைச்சு கொடுக்க சொல்லுவாங்க. சரியான அளவும் பதமும் அவங்களுக்கு நல்லாவே தெரியும். குளிக்கிறதுக்குக்கூட கடையில காசு கொடுத்து சோப் வாங்க மாட்டாங்க. பயத்த மாவுல சோப் மாதிரி ரெடி பண்ணி குளிப்பாங்க. நான், எல்லாமே மாமியார்க்கிட்ட கத்துக்கிட்டதுதான்.

இப்போ கரம் மசாலா, ஃபிஷ் ஃப்ரை மசாலா, குழம்பு மசாலா, பிரியாணி மசாலான்னு ஏகப்பட்ட மசாலாக்கள் வந்துடுச்சு. பெரும்பாலான மசாலா பாக்கெட்டுகளில் அஜினமோட்டா மட்டுமில்லாம பல்வேறு விதமான கெமிக்கல்களும் கலக்கப்படுது. பல்வேறு கெமிக்கல்கள் கலக்கப்படுவதால சின்ன வயசிலேயே பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகிறாங்க. என்னுடைய பொண்ணு இந்துவுக்குத் திருமணம் ஆனதும் நானே அரைத்த மிளகாய்த்தூள், பருப்புப் பொடி எல்லாத்தையுமே அனுப்பி வெச்சேன். பிரேம்ஜி தம்பிக்கு ரொம்ப புடிச்சுப்போச்சி. மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கக் காரணமே பிரேம்ஜி தம்பிதான்.

பிரேம்ஜி மனைவி மற்றும் மாமியார் ஷர்மிளா

அதனாலதான், அவரோட பேரைச் சேர்த்து ’Premgi’s Mamiyar Masala’ன்னு பேர் வெச்சோம். நான், என் பொண்ணு வெளியில போயி சாப்ட்டா வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல்னு வந்திருக்கு. ரொம்பவே அவஸ்தை பட்டிருக்கா. இப்போ, நானே வீட்டுல மசாலாவை அரைச்சு கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்து இந்த மாதிரியான உடல்நலப் பிரச்சனைகள் குறைஞ்சிடுச்சு. என் பிள்ளைகள் மாதிரிதான் எல்லோருமே. என் பிள்ளையோட உடல் நலம் எப்படி ஆரோக்கியமா இருக்கோ, அதேமாதிரிதான் எல்லோருமே ஆரோக்கியமா இருக்கணும்னு நினைக்கிறேன்.

பணம் எங்களுக்கு முக்கியம் கிடையாது. இதன் மூலமாத்தான் வருமானம் ஈட்டணும்னு எங்களுக்கு அவசியமில்ல. இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம், எல்லோரும் கேட்டு வாங்குறாங்க. பிக்கப் ஆனபிறகும்கூட இதே தரத்தோடுதான் கொடுப்பேன். தரத்துல எந்த குறைவும் இருக்காது. நோய் நொடி இல்லாத உலகமா இருக்கணும். அதுதான், எங்களுக்கு முக்கியம்.

அதுக்காகவே, விவசாயிங்கக்கிட்ட நானே நேரடியா போயி மசாலாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிட்டு வர்றேன். மல்லின்னு எடுத்துக்கிட்டா நாலஞ்சு காடையில டேஸ்ட் பார்த்துதான் செலக்ட் பண்ணி வாங்குவேன்.

அம்மா ஷர்மிளாவுடன் குழந்தை இந்து

நாட்டு மல்லி, நாட்டு மிளகு, நாட்டுச் சீரகம் இப்படி எல்லாத்தையும் தரமானதாதான் வாங்குவேன். கொளத்தூர்ல விளைவிக்கிற மிளகாய் ரொம்ப சிறப்பா இருக்கும்னு மேட்டூர் போய் வாங்குவேன். எங்க தோட்டத்திலேயே காய்கறி, முருங்கை, கருவேப்பிலைன்னு நிறைய பயிரிட்டிருக்கோம். அடுத்ததா, முருங்கை பொடி சத்துமாவும் கொண்டுவர ப்ளான் பண்ணியிருக்கோம்.

என்னை என்கரேஜ் பண்ணின என் மருமகன் பிரேம்ஜிக்குத்தான் இந்த கிரெடிட்ல்லாம் போய் சேரணும். எங்களுக்கு பிரேம்ஜி தம்பி மருமகனா வந்ததுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். ஆரம்பத்துல அவரோட பேட்டியை எல்லாம் பார்த்துட்டு பொண்ணே கொடுக்கமாட்டேன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா இப்படியொரு தங்கமான புள்ளையா இருக்காரு.

அவர்க்கிட்ட புடிச்ச விஷயமே பெரியவங்களை ரொம்ப மதிப்பா நடத்துறதுதான். நான், வீட்டுக்கு வந்து வேலை செஞ்சாலும் என் பொண்ணே அதை செய்ம்மா இதை செய்ம்மான்னு சொன்னாலும் பிரேம்ஜி தம்பி, அதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்யச் சொல்றன்னு கோபப்படுவாரு. அந்தளவுக்கு தங்கமான மருமகப்புள்ள பிரேம்ஜி. எனக்கு இன்னொரு மகன்தான் அவர்” என்று மெய்ச்சிலிர்க்கிறார் மாமியார் ஷர்மிளா.

பிரேம்ஜியின் காதல் மனைவி இந்து நம்மிடம், “ஸ்கூல், காலேஜ் எல்லாம் நான் ஹாஸ்டலில் தங்கித்தான் படிச்சேன். வீட்டுல பயங்கர செல்லம். அதனால, அம்மா என்னை சமையல் செய்யல்லாம் விட்டதில்ல. மேரேஜ் ஆனதும் அம்மாக்கிட்டத்தான் கேட்டு கேட்டு சமைப்பேன். எனக்காக, அவரும் (பிரேம்ஜி) ஆசையா சமைச்சு தருவாரு.

மேரேஜ் ஆகி வந்ததும் பாக்கெட் மசாலாதான் பயன்படுத்தினேன். நெஞ்செரிச்சல் எல்லாம் வந்துடுச்சு. அதுக்கப்புறம்தான், மசாலா பொருட்களை அம்மா அரைச்சுக் கொடுத்தாங்க. அம்மா தயாரிக்கிற மசாலா பொருட்களோட சமையலை அவர் ரொம்ப விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுட்டார்.

என்னோட அம்மா சமையலை சாப்பிடுற மாதிரி இருக்குன்னு பாராட்டுறாரு. கங்கை அமரன் அங்கிளும் சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. முன்னாடியெல்லாம் நெஞ்செரிச்சல் வந்தா கங்கை அமரன் அங்கிள் ரசம் குடிப்பாரு. இப்போ, நான் வைக்கிற மிளகு, மசாலா எல்லாம் கலந்து செய்யுற சிக்கன் குழம்பையே ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுறாரு. அவருக்கு இப்போல்லாம் நெஞ்செரிச்சலே வர்றதில்ல.

எங்களோட சொந்தக்காரங்களுக்கும் மசாலா பொருட்களை அம்மா கொடுத்திருந்தாங்க. எல்லாருமே நல்லாருக்குன்னு சொன்னதால, இதையே ஒரு பிசினஸ்ஸா பண்ணலாம்னு கணவர் பிரேம்ஜிதான் ஐடியா கொடுத்தாரு. அதன்படிதான், பிரேம்ஜி மாமியார் மசாலான்னே பேர் வச்சு ஆரம்பிச்சுட்டோம். இப்போ, கடையில தனித்தனியா கரம் மசாலா, சாம்பார் மசாலா, குழம்பு மிளகாய் தூள்னு தனித்தனியா வாங்குறாங்க. ஆனா, அதெல்லாம் தேவையில்ல. நாங்க தயாரிக்கிற மல்டிபிள் மசாலா ஒரே பாக்கெட்டே போதும். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு எல்லாத்துமே ஒரே மசாலா பாக்கெட்டை பயன்படுத்திக்கலாம். இதோட விலை ரொம்ப ரீசனபிள்தான். குழம்பு மிளகாய்த்தூள் 699 ரூபாய், தனி மிளகாய்த்தூளும் 699 ரூபாய்தான்.

premgis mamiyar masala

இப்போ, எங்களோட ’பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ பேஜுக்கு வந்து ஆன்லைன்ல நிறைய பேர் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மும்பையிலிருந்து எல்லாம் ஆர்டர் கேட்டாங்க. முதியோர்களுக்கு தரமான சமையலைக் கொடுக்க க்ளவுட் கிச்சனுக்கெல்லாம் தொடர்ந்து ஆர்டர் பண்ணிட்டிருக்காங்க. எங்களோட தரம்தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று அழுத்தமாகப் பேசும் இந்து பிரேம்ஜி மாமியார் மசாலா பெயர்க்காரணத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”இன்ஸ்டாவுலதான் என்ன பேர் வைக்கலாம்னு ஃபாலோயர்ஸ்கிட்டே கேட்டோம். அப்போ, கணவர்தான் ’பிரேம்ஜி’ஸ் மாமியார் மசாலா’ன்னு கமன்ட் போட்டாரு. அதுக்கு நிறைய லைக்ஸ் விழுந்துச்சு. . பிரேம்ஜியில ஜிக்கு பக்கத்தில வர்ற ‘I’ என்னோட பேரின் ஆரம்பம். மாமியார்ல வர்ற ஃபர்ஸ்ட் ‘M’ எங்க மாமியார் மணிமேகலை பேரும் எங்கப்பா மணிமாறன் பேரும் சேர்த்து வெச்சிருக்கோம். மசாலாவுல வர்ற ‘S’ அம்மாவோட ஷர்மிளாங்குற பேரோட முதல் எழுத்து. இதையெல்லாம் மையப்படுத்திதான், அதையே பேரா வெச்சிட்டோம். மயில் எல்லோருக்குமே பிடிக்கும். அதனால, அதையே லோகோவா வெச்சிட்டோம். இப்போ, எஃப்.எஸ்.எஸ்.ஐ. அதாவது ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவோட அனுமதிக்கும் அனுப்பப்போறோம்” என்கிறவரிடம், ”உங்க திருமண வாழ்க்கை எப்படி போகுது?”என்று கேட்டபோது,

premgi wife indhu

“ரொம்ப ஜாலியா போகுது. நான் ரொம்ப லக்கின்னுதான் சொல்லணும். என்னோட அப்பா இறந்து ரெண்டு வருடம் ஆகுது. அந்த தருணத்துல எல்லாம் என்னை ஆறுதல் சொல்லி மீட்டு கொண்டுவந்தது கணவர் பிரேம்ஜிதான். எனக்கு சமைக்க தெரியலைன்னாலும் அவரே அன்பா சமைச்சு தருவார். அவர்க்கிட்ட நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆன விஷயம்னா அவரோட நேர்மைதான். ரொம்ப ஹானஸ்டா இருப்பார். அது ஒண்ணு போதுமே அவரை பிடிக்கிறதுக்கு”என்று புன்னகைத்தவரிடம், அவர் உங்களுக்கு கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட் எது?” என்று கேட்டபோது, “இந்த அன்பான வாழ்க்கைதான்” என்கிறார் பளிச்சென்று!

 நடிகர் பிரேம்ஜி திருமணம் முடிந்து ரீல்ஸ்களால் சுவாரஸ்யப்படுத்திக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், ‘பிரேம்ஜி மாமியார் மசாலா’ என பாரம்பர்ய முறையில் வீட்டிலேயே மசாலா தயாரிப்பை பிரேம்ஜியின் மனைவி இந்துவும் மாமியார் ஷர்மிளாவும் ஆரம்பித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சமீபத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனத்தின் மசாலா பாக்கெட்டுகளில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் கெமிக்கல்கள் கலந்திருப்பதாக சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பரபரப்பான சூழலில், பாரம்பர்ய முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் கலப்படம் இல்லாத மசாலா பொருட்கள் மீது மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளாவும் மனைவி இந்துவும் இணைந்து மசாலா தயாரிப்பை ஆரம்பித்துள்ளது குறித்து பிரேம்ஜியின் மனைவி மற்றும் மாமியாரிடமும் பேசினேன். பிரேம்ஜி – இந்துமுதலில் பேசிய பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளா, “எங்களோட சொந்த ஊர் சேலம். பெரிய விவசாய கூட்டுக்குடும்பம். சமையலுக்கு மிளகாய்த்தூள், மசாலாவுக்கெல்லாம் வெளியில வாங்கவே மாட்டோம். விவசாய குடும்பம்ங்கிறதால நாங்களே உற்பத்தி செஞ்சு, நாங்களே தயாரிச்சிடுவோம். எங்க மாமியார் ரொம்ப சூப்பரா குழம்பு மசாலாவை ரெடி பண்ணுவாங்க. எங்க சொந்தக்காரங்க எல்லோருக்குமே என் மாமியார் செய்யுற மசாலா ரொம்ப பிடிக்கும். எல்லோருமே அவங்கக்கிட்ட அரைச்சு கொடுக்க சொல்லுவாங்க. சரியான அளவும் பதமும் அவங்களுக்கு நல்லாவே தெரியும். குளிக்கிறதுக்குக்கூட கடையில காசு கொடுத்து சோப் வாங்க மாட்டாங்க. பயத்த மாவுல சோப் மாதிரி ரெடி பண்ணி குளிப்பாங்க. நான், எல்லாமே மாமியார்க்கிட்ட கத்துக்கிட்டதுதான். இப்போ கரம் மசாலா, ஃபிஷ் ஃப்ரை மசாலா, குழம்பு மசாலா, பிரியாணி மசாலான்னு ஏகப்பட்ட மசாலாக்கள் வந்துடுச்சு. பெரும்பாலான மசாலா பாக்கெட்டுகளில் அஜினமோட்டா மட்டுமில்லாம பல்வேறு விதமான கெமிக்கல்களும் கலக்கப்படுது. பல்வேறு கெமிக்கல்கள் கலக்கப்படுவதால சின்ன வயசிலேயே பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகிறாங்க. என்னுடைய பொண்ணு இந்துவுக்குத் திருமணம் ஆனதும் நானே அரைத்த மிளகாய்த்தூள், பருப்புப் பொடி எல்லாத்தையுமே அனுப்பி வெச்சேன். பிரேம்ஜி தம்பிக்கு ரொம்ப புடிச்சுப்போச்சி. மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கக் காரணமே பிரேம்ஜி தம்பிதான். பிரேம்ஜி மனைவி மற்றும் மாமியார் ஷர்மிளாஅதனாலதான், அவரோட பேரைச் சேர்த்து ’Premgi’s Mamiyar Masala’ன்னு பேர் வெச்சோம். நான், என் பொண்ணு வெளியில போயி சாப்ட்டா வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல்னு வந்திருக்கு. ரொம்பவே அவஸ்தை பட்டிருக்கா. இப்போ, நானே வீட்டுல மசாலாவை அரைச்சு கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்து இந்த மாதிரியான உடல்நலப் பிரச்சனைகள் குறைஞ்சிடுச்சு. என் பிள்ளைகள் மாதிரிதான் எல்லோருமே. என் பிள்ளையோட உடல் நலம் எப்படி ஆரோக்கியமா இருக்கோ, அதேமாதிரிதான் எல்லோருமே ஆரோக்கியமா இருக்கணும்னு நினைக்கிறேன். பணம் எங்களுக்கு முக்கியம் கிடையாது. இதன் மூலமாத்தான் வருமானம் ஈட்டணும்னு எங்களுக்கு அவசியமில்ல. இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம், எல்லோரும் கேட்டு வாங்குறாங்க. பிக்கப் ஆனபிறகும்கூட இதே தரத்தோடுதான் கொடுப்பேன். தரத்துல எந்த குறைவும் இருக்காது. நோய் நொடி இல்லாத உலகமா இருக்கணும். அதுதான், எங்களுக்கு முக்கியம்.அதுக்காகவே, விவசாயிங்கக்கிட்ட நானே நேரடியா போயி மசாலாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிட்டு வர்றேன். மல்லின்னு எடுத்துக்கிட்டா நாலஞ்சு காடையில டேஸ்ட் பார்த்துதான் செலக்ட் பண்ணி வாங்குவேன். அம்மா ஷர்மிளாவுடன் குழந்தை இந்துநாட்டு மல்லி, நாட்டு மிளகு, நாட்டுச் சீரகம் இப்படி எல்லாத்தையும் தரமானதாதான் வாங்குவேன். கொளத்தூர்ல விளைவிக்கிற மிளகாய் ரொம்ப சிறப்பா இருக்கும்னு மேட்டூர் போய் வாங்குவேன். எங்க தோட்டத்திலேயே காய்கறி, முருங்கை, கருவேப்பிலைன்னு நிறைய பயிரிட்டிருக்கோம். அடுத்ததா, முருங்கை பொடி சத்துமாவும் கொண்டுவர ப்ளான் பண்ணியிருக்கோம்.என்னை என்கரேஜ் பண்ணின என் மருமகன் பிரேம்ஜிக்குத்தான் இந்த கிரெடிட்ல்லாம் போய் சேரணும். எங்களுக்கு பிரேம்ஜி தம்பி மருமகனா வந்ததுக்கு கொடுத்து வெச்சிருக்கணும். ஆரம்பத்துல அவரோட பேட்டியை எல்லாம் பார்த்துட்டு பொண்ணே கொடுக்கமாட்டேன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா இப்படியொரு தங்கமான புள்ளையா இருக்காரு. அவர்க்கிட்ட புடிச்ச விஷயமே பெரியவங்களை ரொம்ப மதிப்பா நடத்துறதுதான். நான், வீட்டுக்கு வந்து வேலை செஞ்சாலும் என் பொண்ணே அதை செய்ம்மா இதை செய்ம்மான்னு சொன்னாலும் பிரேம்ஜி தம்பி, அதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்யச் சொல்றன்னு கோபப்படுவாரு. அந்தளவுக்கு தங்கமான மருமகப்புள்ள பிரேம்ஜி. எனக்கு இன்னொரு மகன்தான் அவர்” என்று மெய்ச்சிலிர்க்கிறார் மாமியார் ஷர்மிளா.பிரேம்ஜியின் காதல் மனைவி இந்து நம்மிடம், “ஸ்கூல், காலேஜ் எல்லாம் நான் ஹாஸ்டலில் தங்கித்தான் படிச்சேன். வீட்டுல பயங்கர செல்லம். அதனால, அம்மா என்னை சமையல் செய்யல்லாம் விட்டதில்ல. மேரேஜ் ஆனதும் அம்மாக்கிட்டத்தான் கேட்டு கேட்டு சமைப்பேன். எனக்காக, அவரும் (பிரேம்ஜி) ஆசையா சமைச்சு தருவாரு. மேரேஜ் ஆகி வந்ததும் பாக்கெட் மசாலாதான் பயன்படுத்தினேன். நெஞ்செரிச்சல் எல்லாம் வந்துடுச்சு. அதுக்கப்புறம்தான், மசாலா பொருட்களை அம்மா அரைச்சுக் கொடுத்தாங்க. அம்மா தயாரிக்கிற மசாலா பொருட்களோட சமையலை அவர் ரொம்ப விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுட்டார்.என்னோட அம்மா சமையலை சாப்பிடுற மாதிரி இருக்குன்னு பாராட்டுறாரு. கங்கை அமரன் அங்கிளும் சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. முன்னாடியெல்லாம் நெஞ்செரிச்சல் வந்தா கங்கை அமரன் அங்கிள் ரசம் குடிப்பாரு. இப்போ, நான் வைக்கிற மிளகு, மசாலா எல்லாம் கலந்து செய்யுற சிக்கன் குழம்பையே ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுறாரு. அவருக்கு இப்போல்லாம் நெஞ்செரிச்சலே வர்றதில்ல. எங்களோட சொந்தக்காரங்களுக்கும் மசாலா பொருட்களை அம்மா கொடுத்திருந்தாங்க. எல்லாருமே நல்லாருக்குன்னு சொன்னதால, இதையே ஒரு பிசினஸ்ஸா பண்ணலாம்னு கணவர் பிரேம்ஜிதான் ஐடியா கொடுத்தாரு. அதன்படிதான், பிரேம்ஜி மாமியார் மசாலான்னே பேர் வச்சு ஆரம்பிச்சுட்டோம். இப்போ, கடையில தனித்தனியா கரம் மசாலா, சாம்பார் மசாலா, குழம்பு மிளகாய் தூள்னு தனித்தனியா வாங்குறாங்க. ஆனா, அதெல்லாம் தேவையில்ல. நாங்க தயாரிக்கிற மல்டிபிள் மசாலா ஒரே பாக்கெட்டே போதும். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு எல்லாத்துமே ஒரே மசாலா பாக்கெட்டை பயன்படுத்திக்கலாம். இதோட விலை ரொம்ப ரீசனபிள்தான். குழம்பு மிளகாய்த்தூள் 699 ரூபாய், தனி மிளகாய்த்தூளும் 699 ரூபாய்தான். premgis mamiyar masalaஇப்போ, எங்களோட ’பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா’ பேஜுக்கு வந்து ஆன்லைன்ல நிறைய பேர் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மும்பையிலிருந்து எல்லாம் ஆர்டர் கேட்டாங்க. முதியோர்களுக்கு தரமான சமையலைக் கொடுக்க க்ளவுட் கிச்சனுக்கெல்லாம் தொடர்ந்து ஆர்டர் பண்ணிட்டிருக்காங்க. எங்களோட தரம்தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று அழுத்தமாகப் பேசும் இந்து பிரேம்ஜி மாமியார் மசாலா பெயர்க்காரணத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ”இன்ஸ்டாவுலதான் என்ன பேர் வைக்கலாம்னு ஃபாலோயர்ஸ்கிட்டே கேட்டோம். அப்போ, கணவர்தான் ’பிரேம்ஜி’ஸ் மாமியார் மசாலா’ன்னு கமன்ட் போட்டாரு. அதுக்கு நிறைய லைக்ஸ் விழுந்துச்சு. . பிரேம்ஜியில ஜிக்கு பக்கத்தில வர்ற ‘I’ என்னோட பேரின் ஆரம்பம். மாமியார்ல வர்ற ஃபர்ஸ்ட் ‘M’ எங்க மாமியார் மணிமேகலை பேரும் எங்கப்பா மணிமாறன் பேரும் சேர்த்து வெச்சிருக்கோம். மசாலாவுல வர்ற ‘S’ அம்மாவோட ஷர்மிளாங்குற பேரோட முதல் எழுத்து. இதையெல்லாம் மையப்படுத்திதான், அதையே பேரா வெச்சிட்டோம். மயில் எல்லோருக்குமே பிடிக்கும். அதனால, அதையே லோகோவா வெச்சிட்டோம். இப்போ, எஃப்.எஸ்.எஸ்.ஐ. அதாவது ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவோட அனுமதிக்கும் அனுப்பப்போறோம்” என்கிறவரிடம், ”உங்க திருமண வாழ்க்கை எப்படி போகுது?”என்று கேட்டபோது, premgi wife indhu “ரொம்ப ஜாலியா போகுது. நான் ரொம்ப லக்கின்னுதான் சொல்லணும். என்னோட அப்பா இறந்து ரெண்டு வருடம் ஆகுது. அந்த தருணத்துல எல்லாம் என்னை ஆறுதல் சொல்லி மீட்டு கொண்டுவந்தது கணவர் பிரேம்ஜிதான். எனக்கு சமைக்க தெரியலைன்னாலும் அவரே அன்பா சமைச்சு தருவார். அவர்க்கிட்ட நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆன விஷயம்னா அவரோட நேர்மைதான். ரொம்ப ஹானஸ்டா இருப்பார். அது ஒண்ணு போதுமே அவரை பிடிக்கிறதுக்கு”என்று புன்னகைத்தவரிடம், அவர் உங்களுக்கு கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட் எது?” என்று கேட்டபோது, “இந்த அன்பான வாழ்க்கைதான்” என்கிறார் பளிச்சென்று! 

Related Post