விகடன் சின்னத்திரை விருதுகள்: “`நீயா நானா’ நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!” – கோபிநாத்

விகடன் சின்னத்திரை விருதுகள்: “`நீயா நானா’ நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!” – கோபிநாத் post thumbnail image

விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சியில் ஃபேஸ் ஆஃப் தமிழ் டெலிவிஷன் விருது `நீயா நானா’ தொகுப்பாளர் கோபிநாத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியதன் ஹைலைட்ஸ் இங்கே…

“முதன் முதலா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம்னா விகடன் மேடையில கிடைச்சதைத்தான் சொல்வேன். விகடனிடமிருந்து இதுவரை ஆறு முறை விருது வாங்கியிருக்கேன். அதெல்லாமே சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்ன்னு வாங்கினது. ஆனா இன்னைக்குக் கிடைச்சிருக்கிற ‘ஃபேஸ் ஆப் தமிழ் டெலிவிஷன்’ங்கிறது ரொம்பவே பெரிய வார்த்தை. அதுவும் அதே விகடன்கிட்ட இருந்து வந்திருக்குங்கிறது கூடுதல் பெருமை.

கோபிநாத்

இங்க வெவ்வேறு சேனல்களின் ஆர்ட்டிஸ்டுகளை ஒரே மேடையில ஏத்தியிருக்காங்க. அதுவுமே தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றுல சாதாரண விஷயமில்லை. இதுக்குனு பெரியதொரு முயற்சியை எடுத்திருக்காங்கன்னு மட்டும் தெரியுது.

‘நீயா நானா’ நிகழ்ச்சி தொடங்கின புதுசுல ரெண்டு பேட்டரியை மாட்டிகிட்டு ஒர்க் பண்ண வெண்டியிருக்கும். சட்டை மட்டும் போட்டுட்டு அந்த மாதிரி மைக்கை மாட்டிட்டுத் திரியற போது பார்க்கறதுக்கு ஏதோ மனித வெடிகுண்டு போலத் தெரிவோம். அதை மறைக்கறதுக்காகவே முதன்முதல்ல கோட் கொடுத்தாங்க. இப்ப என்னன்னா நான் கழட்டணும்னு நினைச்சாக் கூட கழட்ட முடியாதபடி இந்த நிகழ்ச்சியோட ஒரு அங்கமாகிடுச்சு அந்த கோட்!

‘நீயா நானா’ நிகழ்ச்சிக்காக நான் எத்தனையோ கோட் போட்டிருக்கேன். ஆனா விகடன் இந்த மேடையில நினைவுப் பரிசா எனக்குத் தந்திருக்கிற கோட் என்னுடைய வாழ்நாள் பொக்கிஷம்னு சொல்லலாம். ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்சவங்ககிட்ட இருந்தெல்லாம் அதுல ஆட்டோகிராப் வாங்கி வந்து தந்திருக்காங்க.

கோபிநாத்

கோட்ல ஆட்டோகிராப் போட்டுத் தந்த விஜய் டிவி பாலா சார், பிரதிப் மில்ராய் பீட்டர், இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்கள்ல தூணா இருந்து தாங்கிய ஆண்டனி சார், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் டைரக்டரா இருந்த சாய்ராம் எல்லோருக்கும் நன்றிகள்.

‘நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குநர் திலிபன் பத்திச் சொல்லணும்னா, நல்ல டேலன்ட்டானவர். நிகழ்ச்சியில் உதவி இயக்குநரா இருந்து இன்னைக்கு டைரக்டராகியிருக்கார். ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் கல்ச்சர்னே அதைச் சொல்லலாம். அந்த மாதிரிப் பழக்கி வளர்த்து விட்டுடுவாங்க. பாலா அன் கோ, பிரதீப் அன் கோ… இவங்கெல்லாம் அந்த விஷயத்துல பெரிய வித்தக்காரங்கன்னு சொல்வேன்” என்றார் கோபிநாத்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-இன் நெகிழ்ச்சித் தருணங்களைக் காண, இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்… விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சியில் ஃபேஸ் ஆஃப் தமிழ் டெலிவிஷன் விருது `நீயா நானா’ தொகுப்பாளர் கோபிநாத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியதன் ஹைலைட்ஸ் இங்கே…”முதன் முதலா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம்னா விகடன் மேடையில கிடைச்சதைத்தான் சொல்வேன். விகடனிடமிருந்து இதுவரை ஆறு முறை விருது வாங்கியிருக்கேன். அதெல்லாமே சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்ன்னு வாங்கினது. ஆனா இன்னைக்குக் கிடைச்சிருக்கிற ‘ஃபேஸ் ஆப் தமிழ் டெலிவிஷன்’ங்கிறது ரொம்பவே பெரிய வார்த்தை. அதுவும் அதே விகடன்கிட்ட இருந்து வந்திருக்குங்கிறது கூடுதல் பெருமை.கோபிநாத்இங்க வெவ்வேறு சேனல்களின் ஆர்ட்டிஸ்டுகளை ஒரே மேடையில ஏத்தியிருக்காங்க. அதுவுமே தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றுல சாதாரண விஷயமில்லை. இதுக்குனு பெரியதொரு முயற்சியை எடுத்திருக்காங்கன்னு மட்டும் தெரியுது.’நீயா நானா’ நிகழ்ச்சி தொடங்கின புதுசுல ரெண்டு பேட்டரியை மாட்டிகிட்டு ஒர்க் பண்ண வெண்டியிருக்கும். சட்டை மட்டும் போட்டுட்டு அந்த மாதிரி மைக்கை மாட்டிட்டுத் திரியற போது பார்க்கறதுக்கு ஏதோ மனித வெடிகுண்டு போலத் தெரிவோம். அதை மறைக்கறதுக்காகவே முதன்முதல்ல கோட் கொடுத்தாங்க. இப்ப என்னன்னா நான் கழட்டணும்னு நினைச்சாக் கூட கழட்ட முடியாதபடி இந்த நிகழ்ச்சியோட ஒரு அங்கமாகிடுச்சு அந்த கோட்!’நீயா நானா’ நிகழ்ச்சிக்காக நான் எத்தனையோ கோட் போட்டிருக்கேன். ஆனா விகடன் இந்த மேடையில நினைவுப் பரிசா எனக்குத் தந்திருக்கிற கோட் என்னுடைய வாழ்நாள் பொக்கிஷம்னு சொல்லலாம். ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்சவங்ககிட்ட இருந்தெல்லாம் அதுல ஆட்டோகிராப் வாங்கி வந்து தந்திருக்காங்க.கோபிநாத்கோட்ல ஆட்டோகிராப் போட்டுத் தந்த விஜய் டிவி பாலா சார், பிரதிப் மில்ராய் பீட்டர், இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்கள்ல தூணா இருந்து தாங்கிய ஆண்டனி சார், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் டைரக்டரா இருந்த சாய்ராம் எல்லோருக்கும் நன்றிகள்.’நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குநர் திலிபன் பத்திச் சொல்லணும்னா, நல்ல டேலன்ட்டானவர். நிகழ்ச்சியில் உதவி இயக்குநரா இருந்து இன்னைக்கு டைரக்டராகியிருக்கார். ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் கல்ச்சர்னே அதைச் சொல்லலாம். அந்த மாதிரிப் பழக்கி வளர்த்து விட்டுடுவாங்க. பாலா அன் கோ, பிரதீப் அன் கோ… இவங்கெல்லாம் அந்த விஷயத்துல பெரிய வித்தக்காரங்கன்னு சொல்வேன்” என்றார் கோபிநாத்.ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-இன் நெகிழ்ச்சித் தருணங்களைக் காண, இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்… 

Related Post