Karan Johar: “எனக்கு Body Dysmorphia என்ற நோய் இருக்கிறது. அதனால்…” – கரண் ஜோஹர்

Karan Johar: “எனக்கு Body Dysmorphia என்ற நோய் இருக்கிறது. அதனால்…” – கரண் ஜோஹர் post thumbnail image

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர்.

மேலும், `காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது இவரது தயாரிப்பில் ‘Kill’ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை நிகில் நாகேஷ் பட் இயக்கி இருக்கிறார். லக்ஷயா, தான்யா, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். நேற்று (ஜூலை 5) திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கரண் ஜோகர்

இந்நிலையில், ‘Kill’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கரண் ஜோஹர், தனக்கு ‘Body Dysmorphia’ (தங்களின் உடல் தோற்றத்தைப் பற்றி அதீதமான எதிர்மறையான சிந்தனையைத் தூண்டும் ஒரு வித நோய். தங்களது தோற்றம் மோசமாக இருப்பதாக அவர்களே நினைத்துக்கொள்வார்கள்) என்ற ஒரு நோய் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்த நோய் இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து மாத்திரைகளை எடுத்திருக்கிறேன்.

இதனால் எனக்கு மனநலப் பிரச்சனைகளும் ஏற்பட்டது. அதிலிருந்து மீள நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன்.

கரன் ஜோஹர்

நான் உடல் எடையைக் குறைத்து என்னை நன்றாக வைத்துக்கொண்டாலும் நான் இந்த நோயுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

 பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர்.மேலும், `காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது இவரது தயாரிப்பில் ‘Kill’ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை நிகில் நாகேஷ் பட் இயக்கி இருக்கிறார். லக்ஷயா, தான்யா, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். நேற்று (ஜூலை 5) திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கரண் ஜோகர்இந்நிலையில், ‘Kill’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கரண் ஜோஹர், தனக்கு ‘Body Dysmorphia’ (தங்களின் உடல் தோற்றத்தைப் பற்றி அதீதமான எதிர்மறையான சிந்தனையைத் தூண்டும் ஒரு வித நோய். தங்களது தோற்றம் மோசமாக இருப்பதாக அவர்களே நினைத்துக்கொள்வார்கள்) என்ற ஒரு நோய் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்த நோய் இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். இதனால் எனக்கு மனநலப் பிரச்சனைகளும் ஏற்பட்டது. அதிலிருந்து மீள நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன். கரன் ஜோஹர்நான் உடல் எடையைக் குறைத்து என்னை நன்றாக வைத்துக்கொண்டாலும் நான் இந்த நோயுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார். 

Related Post