Manjummel Boys: “மலை உச்சியில் சர்ச்; 700 அடி பள்ளத்தாக்கு!” – கமல்ஹாசன் சொன்ன `குணா குகை’ ரகசியம்!

Manjummel Boys: “மலை உச்சியில் சர்ச்; 700 அடி பள்ளத்தாக்கு!” – கமல்ஹாசன் சொன்ன `குணா குகை’ ரகசியம்! post thumbnail image

`மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாளப் படம் எல்லைகளைக் கடந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழக ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் கூடுதலாகவே உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆகியிருக்கிறது. காரணம், கமல்ஹாசனின் `குணா’ திரைப்படம்.Manjummel Boys`மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா’ குகையை மையப்படுத்தியதுதான். படத்தின் முக்கியமான காட்சியில் `கண்மணி அன்போடு காதலன்…’ என இளையராஜா இசையில் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் போது அப்படியே சிலிர்த்துவிடுகிறது. பல ஆண்டுகள் கழித்து இப்போதைய தலைமுறைக்கும் அலாதியான உணர்வைத் தரும் `குணா’ திரைப்படத்தைப் பற்றி அந்தப் படம் வெளியான சமயத்தில் வந்த செய்திகளையும் பேட்டிகளையும் அறிய வேண்டி விகடனின் பழைய இதழ்களைப் புரட்டினோம்.Guna

‘குணா’ திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் கமல்ஹாசன் ஆனந்த விகடனுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

“ரொம்ப நாள்களுக்குப் பிறகு வித்தியாசமா ஒரு லவ் ஸ்டோரி பண்ணியிருக்கேன். எங்கள் கதையின் நாயகன் குணசேகரன். சுருக்கமாக குணா! அவன் தனியானவன்; விசித்திரமானவன்! மிகச்சிறந்த சிவசக்தி பக்தன். அவனது மனத்தை ஒரு எண்ணம் ஆக்கிரமித்துவிட்டால் எந்த நிலையிலும் அவன் அதற்காக எதுவும் செய்வான்! அவனது மனத்தை காதல் ஆக்கிரமிக்கிறது. அவனை மனநோயாளியாக உலகம் பார்க்கிறது. ஆனால், அவன் மனநோயாளி அல்ல. யாரும் அவனை புரிந்துகொள்ளத் தயாராக இல்லை – அவள் ஒருத்தியைத் தவிர! அவளை அவன் விரும்புகிறான் தீவிரமாக! அந்தக் காதலின் போராட்டம்தான் கதை.

Vikatan Archives – குணா கமல் பேட்டிபொதுவாக திரைப்படங்களில் மனநோயாளி கேரக்டரை காமெடிக்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால், தன்னை மனநோயாளியாக நினைத்து ஏளனம் செய்யும் உலகத்தை எண்ணி வெதும்புகிற ஒரு ஜீவனை இந்தப் படம் வெளிப்படுத்தும்.”

இந்த படத்தைப் பற்றி சொல்லுங்களேன் என நிருபர் கேட்க, கமல்ஹாசன் குணாவை இப்படி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

Manjummel Boys: குணா குகையில் சிக்கும் இளைஞர்; போராடும் நண்பர்கள்! சர்வைவல் த்ரில்லர் மிரட்டுகிறதா?

‘குணா’ குகை என பின்நாட்களில் அறியப்பட்ட அந்த குகைதான் படத்தின் ஹைலைட். அதைப் பற்றி பேசும் கமல், “கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் டைரக்டர் சந்தானபாரதியும் ஏழு கிலோ மீட்டர் அலைந்தும் திருப்தியான இடம் அமையாத நிலையில் ‘இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் பார்ப்போமே’ என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது.

Gunaஅது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே போட்டோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே எழுநூறு அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது.”

என ‘குணா’ படத்தின் லொகேஷன் பார்க்கச் சென்ற அனுபவங்களை கமலே அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

கமல் ஓர் ஆச்சர்யம். குணா ஓர் ஆச்சர்யம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இந்த ஆச்சர்யங்களுக்கு நம்மை மறுபிரவேசம் செய்ய வைத்துள்ளது.

பேட்டி கண்டவர்: ப.திருப்பதிசாமி

 `மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற மலையாளப் படம் எல்லைகளைக் கடந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழக ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் கூடுதலாகவே உணர்வுப்பூர்வமாக கனெக்ட் ஆகியிருக்கிறது. காரணம், கமல்ஹாசனின் `குணா’ திரைப்படம்.Manjummel Boys`மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா’ குகையை மையப்படுத்தியதுதான். படத்தின் முக்கியமான காட்சியில் `கண்மணி அன்போடு காதலன்…’ என இளையராஜா இசையில் கமல்ஹாசன் குரலில் ஒலிக்கும் போது அப்படியே சிலிர்த்துவிடுகிறது. பல ஆண்டுகள் கழித்து இப்போதைய தலைமுறைக்கும் அலாதியான உணர்வைத் தரும் `குணா’ திரைப்படத்தைப் பற்றி அந்தப் படம் வெளியான சமயத்தில் வந்த செய்திகளையும் பேட்டிகளையும் அறிய வேண்டி விகடனின் பழைய இதழ்களைப் புரட்டினோம்.Guna’குணா’ திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் கமல்ஹாசன் ஆனந்த விகடனுக்காக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “ரொம்ப நாள்களுக்குப் பிறகு வித்தியாசமா ஒரு லவ் ஸ்டோரி பண்ணியிருக்கேன். எங்கள் கதையின் நாயகன் குணசேகரன். சுருக்கமாக குணா! அவன் தனியானவன்; விசித்திரமானவன்! மிகச்சிறந்த சிவசக்தி பக்தன். அவனது மனத்தை ஒரு எண்ணம் ஆக்கிரமித்துவிட்டால் எந்த நிலையிலும் அவன் அதற்காக எதுவும் செய்வான்! அவனது மனத்தை காதல் ஆக்கிரமிக்கிறது. அவனை மனநோயாளியாக உலகம் பார்க்கிறது. ஆனால், அவன் மனநோயாளி அல்ல. யாரும் அவனை புரிந்துகொள்ளத் தயாராக இல்லை – அவள் ஒருத்தியைத் தவிர! அவளை அவன் விரும்புகிறான் தீவிரமாக! அந்தக் காதலின் போராட்டம்தான் கதை. Vikatan Archives – குணா கமல் பேட்டிபொதுவாக திரைப்படங்களில் மனநோயாளி கேரக்டரை காமெடிக்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால், தன்னை மனநோயாளியாக நினைத்து ஏளனம் செய்யும் உலகத்தை எண்ணி வெதும்புகிற ஒரு ஜீவனை இந்தப் படம் வெளிப்படுத்தும்.”இந்த படத்தைப் பற்றி சொல்லுங்களேன் என நிருபர் கேட்க, கமல்ஹாசன் குணாவை இப்படி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். Manjummel Boys: குணா குகையில் சிக்கும் இளைஞர்; போராடும் நண்பர்கள்! சர்வைவல் த்ரில்லர் மிரட்டுகிறதா?’குணா’ குகை என பின்நாட்களில் அறியப்பட்ட அந்த குகைதான் படத்தின் ஹைலைட். அதைப் பற்றி பேசும் கமல், “கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் டைரக்டர் சந்தானபாரதியும் ஏழு கிலோ மீட்டர் அலைந்தும் திருப்தியான இடம் அமையாத நிலையில் ‘இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் பார்ப்போமே’ என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது.Gunaஅது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே போட்டோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே எழுநூறு அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது.”என ‘குணா’ படத்தின் லொகேஷன் பார்க்கச் சென்ற அனுபவங்களை கமலே அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.கமல் ஓர் ஆச்சர்யம். குணா ஓர் ஆச்சர்யம். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இந்த ஆச்சர்யங்களுக்கு நம்மை மறுபிரவேசம் செய்ய வைத்துள்ளது.பேட்டி கண்டவர்: ப.திருப்பதிசாமி 

Related Post