இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார்!

இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார்! post thumbnail image

இயக்குநர் லிங்குசாமியின் மூத்த சகோதரர் கேசவன் மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 60.

‘ஆனந்தம்’, `ரன்’, ‘பையா’, ‘தி வாரியர்’ உள்பட பல படங்களின் இயக்குநர் லிங்குசாமி. வழக்கு எண் 18/9, கமலின் ‘உத்தம வில்லன்’ உள்பட சில படங்களை தயாரித்து உள்ளார். லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என இரண்டு அண்ணன்களும், சுபாஷ் சந்திரபோஸ் என்ற தம்பியும் உண்டு. இதில் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை மாரடைப்பினால் இறந்துள்ளார். கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் திருப்பதி மளிகை கடை வைத்திருந்தார். சமீபகாலமாக சென்னையில் அண்ணனுடன் இருந்து வந்தவர் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார். இன்று காலை சென்னையில் காலமானார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை குடந்தை மாதுளம்பேட்டை உள்ள அவரது சகோதரர் இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.

இயக்குநர் லிங்குசாமி

மறைந்த கேசவனின் மகன் வினோத், ‘கோலி சோடா 2’ படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தவிர லிங்குசாமி தயாரித்த ‘நான் தான் சிவா’ என்ற படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

 இயக்குநர் லிங்குசாமியின் மூத்த சகோதரர் கேசவன் மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 60.’ஆனந்தம்’, `ரன்’, ‘பையா’, ‘தி வாரியர்’ உள்பட பல படங்களின் இயக்குநர் லிங்குசாமி. வழக்கு எண் 18/9, கமலின் ‘உத்தம வில்லன்’ உள்பட சில படங்களை தயாரித்து உள்ளார். லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என இரண்டு அண்ணன்களும், சுபாஷ் சந்திரபோஸ் என்ற தம்பியும் உண்டு. இதில் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை மாரடைப்பினால் இறந்துள்ளார். கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் திருப்பதி மளிகை கடை வைத்திருந்தார். சமீபகாலமாக சென்னையில் அண்ணனுடன் இருந்து வந்தவர் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார். இன்று காலை சென்னையில் காலமானார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை குடந்தை மாதுளம்பேட்டை உள்ள அவரது சகோதரர் இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. இயக்குநர் லிங்குசாமிமறைந்த கேசவனின் மகன் வினோத், ‘கோலி சோடா 2’ படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். தவிர லிங்குசாமி தயாரித்த ‘நான் தான் சிவா’ என்ற படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது என்கிறார்கள். 

Related Post