Article 370: “மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்வார்கள்!” – காஷ்மீர் குறித்த படத்தைப் பாராட்டிய மோடி

Article 370: “மக்கள் உண்மையைத்  தெரிந்துகொள்வார்கள்!” – காஷ்மீர் குறித்த படத்தைப் பாராட்டிய மோடி post thumbnail image

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில், பாலிவுட் நடிகை யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆர்டிகள் 370’.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரத்து செய்தது. இது குறித்துதான் ‘ஆர்டிகிள் 370’ படம் பேசுகிறது. வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அரசியல் ரீதியாக விமர்சனங்களைச் சந்தித்தது. இப்படத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இப்படத்தைப் பிரதமர் மோடி பாராட்டிப் பேசியிருக்கிறார். 

பிரதமர் மோடி

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த 370வது சட்டப்பிரிவை பா.ஜ.க அரசு நீக்கியது. அதனால் தற்போது ஜம்மு – காஷ்மீர் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2014க்கு முன் ஜம்மு – காஷ்மீரில் 4 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது 12 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த வாரம் ‘ஆர்டிகிள் 370’ பற்றிய படம் ஒன்று வெளியாவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் உண்மையான தகவல்களைத்  தெரிந்துகொள்ள இப்படம் உதவும் என்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார். 

It is an absolute honour to watch PM @narendramodi Ji talk about #Article370Movie.
My team and I really hope that we all exceed your expectations in bringing this incredible story to the screen!
@AdityaDharFilms@jiostudios @B62Studios https://t.co/jgoqCPYuJL

— Yami Gautam Dhar (@yamigautam) February 20, 2024

இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த யாமி கௌதம், பிரதமர் மோடிக்குத் தனது ட்வீட் மூலம் நன்றியைத் தெரிவித்திருக்கிறார். “ஆர்டிகிள் 370 படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பார்க்கும்போது மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் எதிர்பார்ப்புகளை நானும் எனது படக்குழுவினரும் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன்” என அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம், காஷ்மீர் பிரச்னை குறித்த உண்மையைப் படமாக்குகிறேன் என்பதாக ‘அந்த முடிவு சரியே’ என்பதை நிறுவ முயலும் பிரசாரப் படமாக இது உருவாகியிருப்பதாக ஒரு தரப்பினர் எதிர்க்கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

 ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில், பாலிவுட் நடிகை யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆர்டிகள் 370’.ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரத்து செய்தது. இது குறித்துதான் ‘ஆர்டிகிள் 370’ படம் பேசுகிறது. வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அரசியல் ரீதியாக விமர்சனங்களைச் சந்தித்தது. இப்படத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இப்படத்தைப் பிரதமர் மோடி பாராட்டிப் பேசியிருக்கிறார். பிரதமர் மோடிஇது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த 370வது சட்டப்பிரிவை பா.ஜ.க அரசு நீக்கியது. அதனால் தற்போது ஜம்மு – காஷ்மீர் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2014க்கு முன் ஜம்மு – காஷ்மீரில் 4 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில் தற்போது 12 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இந்த வாரம் ‘ஆர்டிகிள் 370’ பற்றிய படம் ஒன்று வெளியாவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் உண்மையான தகவல்களைத்  தெரிந்துகொள்ள இப்படம் உதவும் என்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார். It is an absolute honour to watch PM @narendramodi Ji talk about #Article370Movie.My team and I really hope that we all exceed your expectations in bringing this incredible story to the screen! ✨@AdityaDharFilms@jiostudios @B62Studios https://t.co/jgoqCPYuJL— Yami Gautam Dhar (@yamigautam) February 20, 2024

இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த யாமி கௌதம், பிரதமர் மோடிக்குத் தனது ட்வீட் மூலம் நன்றியைத் தெரிவித்திருக்கிறார். “ஆர்டிகிள் 370 படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பார்க்கும்போது மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் எதிர்பார்ப்புகளை நானும் எனது படக்குழுவினரும் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன்” என அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.அதே சமயம், காஷ்மீர் பிரச்னை குறித்த உண்மையைப் படமாக்குகிறேன் என்பதாக ‘அந்த முடிவு சரியே’ என்பதை நிறுவ முயலும் பிரசாரப் படமாக இது உருவாகியிருப்பதாக ஒரு தரப்பினர் எதிர்க்கருத்தும் தெரிவித்து வருகின்றனர். 

Related Post