Vikrant Massey: “என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்ப்பேன்!” – `12th ஃபெயில்’ விக்ராந்த் மாஸ்ஸி

Vikrant Massey: “என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்ப்பேன்!” – `12th ஃபெயில்’ விக்ராந்த் மாஸ்ஸி post thumbnail image

சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த பாலிவுட் திரைப்படம் ’12th ஃபெயில்’.

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்படியானத் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்து பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது ’12th ஃபெயில்’. இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸியும் இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

விக்ராந்த் மாஸ்ஸி – 12th ஃபெயில்

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்ராந்த் மாஸ்ஸி, தனக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி ‘மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது’ என்றும், தன் குடும்பத்தினர் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தார்.

விக்ராந்த் மாஸ்ஸின் தந்தை – கிறிஸ்துவர், தாய் – சீக்கியர், அவரது சகோதரர் 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர். இப்படிப் பல மதங்களைப் பின்பற்றும் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “எம் அம்மா சீக்கியர். என் தந்தை கிறிஸ்துவர், வாரம் இருமுறை தேவாலயம் செல்லுபவர். வீட்டில் லஷ்மி பூஜையும் செய்பவர்.

எனது சகோதரர் பெயர் மோயின், 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மதம் மாறியவர். இப்படி எங்கள் குடும்பத்தினர் பல மதங்களைப் பின்பற்றுகின்றனர். என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ‘உனக்கு அது மனநிம்மதியைத் தருமென்றால், அதில் செல்வதில் தவறில்லை’ என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிறுவயதில் நானும் மதங்கள் குறித்து என் குடும்பத்தினரிடம் நிறைய உரையாடியிருக்கிறேன்.

விக்ராந்த் மாஸ்ஸியின் குடும்பத்தினர்

என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது உறவினர்கள் பலரும் ‘ஏன் அவனை மதம் மாற அனுமதித்தீர்கள்’ என்று கேள்வியெழுப்பினார்கள். அதற்கு என் தந்தை, ‘யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் தலையிடக் கூடாது’ என்றார்.

இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு, ‘மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது’ என்றுதான் தோன்றும். என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதேசமயம் மதங்களில் இருக்கும் நம் இந்திய கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுப்பேன்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

 சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த பாலிவுட் திரைப்படம் ’12th ஃபெயில்’.கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்படியானத் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்து பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது ’12th ஃபெயில்’. இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸியும் இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். விக்ராந்த் மாஸ்ஸி – 12th ஃபெயில்இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்ராந்த் மாஸ்ஸி, தனக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி ‘மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது’ என்றும், தன் குடும்பத்தினர் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தார்.விக்ராந்த் மாஸ்ஸின் தந்தை – கிறிஸ்துவர், தாய் – சீக்கியர், அவரது சகோதரர் 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர். இப்படிப் பல மதங்களைப் பின்பற்றும் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “எம் அம்மா சீக்கியர். என் தந்தை கிறிஸ்துவர், வாரம் இருமுறை தேவாலயம் செல்லுபவர். வீட்டில் லஷ்மி பூஜையும் செய்பவர்.எனது சகோதரர் பெயர் மோயின், 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மதம் மாறியவர். இப்படி எங்கள் குடும்பத்தினர் பல மதங்களைப் பின்பற்றுகின்றனர். என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ‘உனக்கு அது மனநிம்மதியைத் தருமென்றால், அதில் செல்வதில் தவறில்லை’ என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிறுவயதில் நானும் மதங்கள் குறித்து என் குடும்பத்தினரிடம் நிறைய உரையாடியிருக்கிறேன்.விக்ராந்த் மாஸ்ஸியின் குடும்பத்தினர்என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்குச் செல்லும்போது உறவினர்கள் பலரும் ‘ஏன் அவனை மதம் மாற அனுமதித்தீர்கள்’ என்று கேள்வியெழுப்பினார்கள். அதற்கு என் தந்தை, ‘யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் தலையிடக் கூடாது’ என்றார். இதையெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு, ‘மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது’ என்றுதான் தோன்றும். என் குழந்தைகளைப் பகுத்தறிவுடன் வளர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதேசமயம் மதங்களில் இருக்கும் நம் இந்திய கலாசாரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுப்பேன்” என்று மனம் திறந்து பேசியுள்ளார். 

Related Post