பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மற்றும் நடிகர் தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் சமீபத்தில் தனது கணவர் பரத்தை பிரிவதாக அறிவித்தார். இருவரும் மனமொத்தபடி இம்முடிவை எடுத்திருப்பதாக அறிவித்தனர். இஷா தியோலின் இம்முடிவுக்கு அவரது தாயார் ஹேமாமாலினி ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மகளின் முடிவு குறித்து ஹேமாமாலினி இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பரத்தும் இஷா தியோலும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்தே இருந்துள்ளனர். ‘இருவரும் பிரிவது’ என்ற முடிவை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருந்தனர். அதனால் அவர்களின் முடிவு ஹேமாமாலினிக்கு எந்த வித அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. ஆனால் இஷா தியோலின் முடிவுக்கு அவரின் தந்தையான நடிகர் தர்மேந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கணவருடன் இஷா தியோல்
மகளின் இம்முடிவு குறித்து தர்மேந்திரா மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இருவரின் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என்பதால் இஷா தியோல் தனது கணவரைப் பிரிவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தர்மேந்திரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
எந்தப் பெற்றோரும் தங்களது குழந்தைகள் பிரிவதைப் விரும்ப மாட்டார்கள். தனது மகள் கணவரைப் பிரியும் முடிவுக்கு தர்மேந்திரா எதிராக இருக்கவில்லை என்றும், ஆனால் அம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் தர்மேந்திரா விரும்புவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.
தர்மேந்திரா, இஷா தியோல்
இஷா தியோலின் இரண்டு குழந்தைகளும் தங்களின் தாத்தா மற்றும் பாட்டியிடம் அதிக பாசத்துடன் இருப்பார்களாம். இஷா தியோல் இப்போது தனது கணவரைப் பிரிந்ததிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார். 2012ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மற்றும் நடிகர் தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் சமீபத்தில் தனது கணவர் பரத்தை பிரிவதாக அறிவித்தார். இருவரும் மனமொத்தபடி இம்முடிவை எடுத்திருப்பதாக அறிவித்தனர். இஷா தியோலின் இம்முடிவுக்கு அவரது தாயார் ஹேமாமாலினி ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மகளின் முடிவு குறித்து ஹேமாமாலினி இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. பரத்தும் இஷா தியோலும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்தே இருந்துள்ளனர். ‘இருவரும் பிரிவது’ என்ற முடிவை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருந்தனர். அதனால் அவர்களின் முடிவு ஹேமாமாலினிக்கு எந்த வித அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. ஆனால் இஷா தியோலின் முடிவுக்கு அவரின் தந்தையான நடிகர் தர்மேந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கணவருடன் இஷா தியோல்மகளின் இம்முடிவு குறித்து தர்மேந்திரா மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இருவரின் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என்பதால் இஷா தியோல் தனது கணவரைப் பிரிவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தர்மேந்திரா விருப்பம் தெரிவித்துள்ளார்.எந்தப் பெற்றோரும் தங்களது குழந்தைகள் பிரிவதைப் விரும்ப மாட்டார்கள். தனது மகள் கணவரைப் பிரியும் முடிவுக்கு தர்மேந்திரா எதிராக இருக்கவில்லை என்றும், ஆனால் அம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் தர்மேந்திரா விரும்புவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.தர்மேந்திரா, இஷா தியோல்இஷா தியோலின் இரண்டு குழந்தைகளும் தங்களின் தாத்தா மற்றும் பாட்டியிடம் அதிக பாசத்துடன் இருப்பார்களாம். இஷா தியோல் இப்போது தனது கணவரைப் பிரிந்ததிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார். 2012ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.