பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இதற்கு முன்பு வெளிநாட்டு புத்தகங்களுக்கு ஆபாசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மீண்டும் நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கும் விளம்பரம் ஒன்றில் ரன்வீர் சிங் நடித்து இருக்கிறார்.
பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்து மற்றும் மாத்திரை விளம்பரத்தில் பிரபல நடிகர்கள் நடிக்க தயங்குவதுண்டு. ஆனால் நடிகர் ரன்வீர் துணிந்து அதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதுவும் ஆபாசப் படங்களில் அதிகமாக நடிக்கும் ஜானி சின்ஸ் என்ற நடிகருடன் சேர்ந்து இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இந்த விளம்பரம் டிவி சீரியல் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரம் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் இது தீபேக் எனப்படும் போலி வீடியோ என்று நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தை பார்த்த பலரும் ஆபாச பட நடிகருடன் சேர்ந்து ரன்வீர் சிங் விளம்பரத்தில் நடித்திருப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ஆண்களின் தாம்பத்திய பிரச்னை குறித்த விளம்பரத்தில் நடித்ததற்கு சிலர் ரன்வீர் சிங்கை பாராட்டியும் இருக்கின்றனர். சிலர் ரன்வீர் சிங் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
டிவி சீரியல் நடிகை ரஷமி தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதில்,”ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பரம் அனைத்து டிவி துறை மற்றும் அதில் பணியாற்றுபவர்களை அவமானப்படுத்துவதாகவும், அறைந்தது போன்று உணர்கிறேன். டிவியை மக்கள் சின்னத்திரை என்று அழைத்தாலும் அதில்தான் மக்கள் செய்தி மற்றும் கிரிக்கெட்டைப் பார்க்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். சின்னத்திரையைச் சேர்ந்த பலரும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரன்வீர் சிங் தான் நடித்துள்ள போல்டு கேர் மாத்திரையின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இதற்கு முன்பு வெளிநாட்டு புத்தகங்களுக்கு ஆபாசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மீண்டும் நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கும் விளம்பரம் ஒன்றில் ரன்வீர் சிங் நடித்து இருக்கிறார்.பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்து மற்றும் மாத்திரை விளம்பரத்தில் பிரபல நடிகர்கள் நடிக்க தயங்குவதுண்டு. ஆனால் நடிகர் ரன்வீர் துணிந்து அதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதுவும் ஆபாசப் படங்களில் அதிகமாக நடிக்கும் ஜானி சின்ஸ் என்ற நடிகருடன் சேர்ந்து இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இந்த விளம்பரம் டிவி சீரியல் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரம் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் இது தீபேக் எனப்படும் போலி வீடியோ என்று நினைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தை பார்த்த பலரும் ஆபாச பட நடிகருடன் சேர்ந்து ரன்வீர் சிங் விளம்பரத்தில் நடித்திருப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ஆண்களின் தாம்பத்திய பிரச்னை குறித்த விளம்பரத்தில் நடித்ததற்கு சிலர் ரன்வீர் சிங்கை பாராட்டியும் இருக்கின்றனர். சிலர் ரன்வீர் சிங் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டிவி சீரியல் நடிகை ரஷமி தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதில்,”ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பரம் அனைத்து டிவி துறை மற்றும் அதில் பணியாற்றுபவர்களை அவமானப்படுத்துவதாகவும், அறைந்தது போன்று உணர்கிறேன். டிவியை மக்கள் சின்னத்திரை என்று அழைத்தாலும் அதில்தான் மக்கள் செய்தி மற்றும் கிரிக்கெட்டைப் பார்க்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். சின்னத்திரையைச் சேர்ந்த பலரும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரன்வீர் சிங் தான் நடித்துள்ள போல்டு கேர் மாத்திரையின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.