தனுஷ், தானே இயக்கி நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘D50’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் தனது அடுத்த படத்தைத் தொடங்குவதற்காகவே, தான் இயக்கும் ‘D50’ படத்தை சீக்கிரமே முடித்து ஒப்படைத்து விட்டார் தனுஷ். இப்போது, சேகர் டைரக்ட் செய்யும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டார். இப்படத்தில் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரோடு இன்னும் சில முக்கியமான நடிகர்கள் கேமியோ ரோலில் வந்து ஆச்சர்யப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.
சேகர் கம்மூலா, தனுஷ்
ஜனவரி 18ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முடிந்துவிட்டது. விரைவில் மொத்த படத்தையும் முடித்துக் கொடுப்பதற்காக படக்குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதற்கிடையில் அடுத்ததாக அ.வினோத் படத்தை தேர்வு செய்துவிட்டார் தனுஷ். ஏப்ரல் மாதம் படப்பிடிப்புச் செல்ல தயாராக இருக்குமாறு வினோத்திற்கு சொல்லிவிட்டார்.
திடீரென தனுஷ் தன் கால்ஷீட்டை வினோத்திற்குத் திருப்பி விட்டதில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித்குமார் குஷியாகிவிட்டார். இது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன.
அ.வினோத் இயக்கும் படத்திலிருந்து தனுஷ் தன் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு படங்களுக்குப் பிறகுதான் இந்த சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். கமலோடு வினோத் செய்யும் படம் தாமதம் ஆவதால் தனுஷ் படத்தில் வினோத் இறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்படம் 2022-ம் ஆண்டே ஆரம்பத்திருக்க வேண்டிய படம்.
கமல், H. வினோத்
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து, மேலும் ஒரு படமாக ‘துணிவு’ படத்தையும் செய்யும்படி அஜித், வினோத்திடம் கேட்டுக் கொண்டதால் தனுஷுடனான படம் தள்ளிப்போனது. வினோத்தும் நெடுங்காலமாய் காத்திருப்பதால் உடனே சேகர் படம் முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று வினோத்திற்கு வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார் தனுஷ். சேகர் படம் முடிந்த கையோடு உடனே வினோத் படம் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 15ம் தேதி ஷூட்டிங் என முடிவு செய்துவிட்டார்கள்.
இதற்கிடையில் கமல் – வினோத்தின் ‘KH233’படம் என்னவாயிற்று என்று அடுத்து கேட்பீர்கள். இன்னும் அந்த புராஜெக்ட் உயிரோடுதான் இருக்கிறது. கமல் கண் ஜாடை காட்டினால் உடனே ஆரம்பம் தான்.
தனுஷ், தானே இயக்கி நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘D50’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றன.தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் தனது அடுத்த படத்தைத் தொடங்குவதற்காகவே, தான் இயக்கும் ‘D50′ படத்தை சீக்கிரமே முடித்து ஒப்படைத்து விட்டார் தனுஷ். இப்போது, சேகர் டைரக்ட் செய்யும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டார். இப்படத்தில் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரோடு இன்னும் சில முக்கியமான நடிகர்கள் கேமியோ ரோலில் வந்து ஆச்சர்யப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது. சேகர் கம்மூலா, தனுஷ்ஜனவரி 18ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முடிந்துவிட்டது. விரைவில் மொத்த படத்தையும் முடித்துக் கொடுப்பதற்காக படக்குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதற்கிடையில் அடுத்ததாக அ.வினோத் படத்தை தேர்வு செய்துவிட்டார் தனுஷ். ஏப்ரல் மாதம் படப்பிடிப்புச் செல்ல தயாராக இருக்குமாறு வினோத்திற்கு சொல்லிவிட்டார். திடீரென தனுஷ் தன் கால்ஷீட்டை வினோத்திற்குத் திருப்பி விட்டதில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித்குமார் குஷியாகிவிட்டார். இது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன. அ.வினோத் இயக்கும் படத்திலிருந்து தனுஷ் தன் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு படங்களுக்குப் பிறகுதான் இந்த சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். கமலோடு வினோத் செய்யும் படம் தாமதம் ஆவதால் தனுஷ் படத்தில் வினோத் இறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்படம் 2022-ம் ஆண்டே ஆரம்பத்திருக்க வேண்டிய படம். கமல், H. வினோத்’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து, மேலும் ஒரு படமாக ‘துணிவு’ படத்தையும் செய்யும்படி அஜித், வினோத்திடம் கேட்டுக் கொண்டதால் தனுஷுடனான படம் தள்ளிப்போனது. வினோத்தும் நெடுங்காலமாய் காத்திருப்பதால் உடனே சேகர் படம் முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று வினோத்திற்கு வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார் தனுஷ். சேகர் படம் முடிந்த கையோடு உடனே வினோத் படம் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 15ம் தேதி ஷூட்டிங் என முடிவு செய்துவிட்டார்கள். இதற்கிடையில் கமல் – வினோத்தின் ‘KH233’படம் என்னவாயிற்று என்று அடுத்து கேட்பீர்கள். இன்னும் அந்த புராஜெக்ட் உயிரோடுதான் இருக்கிறது. கமல் கண் ஜாடை காட்டினால் உடனே ஆரம்பம் தான்.