விஜய்யின் சம்பளம் பெரிய அளவில் உயரக் காரணம் ‘மாஸ்டர்’ படம். அதை விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்தார்.
பெருமளவு படத்திற்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி, கணிசமாக விளம்பரம் செய்து, விஜய் சேதுபதியை எல்லாம் படத்தில் கொண்டு வந்து என படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. விளைவு படம் பெரிதாகக் கல்லா கட்டியது.
விஷ்ணுவர்தன், ஆகாஷ்
கல்லூரியயில் படித்து வந்த அவரின் மகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் கல்யாணமும் நல்லபடியாக முடிய, அண்ணனைப் போல ஆகாஷ்க்கும் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. மருமகனின் ஆசையை மாமனார் பிரிட்டோ நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். உடனே மாஸ்டர் படத்திற்குப் பிறகு அடுத்த படத்தைத் தொடங்குவதாக அறிவிப்பு செய்தார். இந்தியில் பிஸியாக இருந்த விஷ்ணுவர்தனை தயாரிப்புக்குள் கொண்டு வந்து கோலாகலமாக ஆரம்பித்தார்கள். அப்போது விருமனில் மட்டும் நடித்திருந்த அதிதி சங்கரை ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சில நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கல் நாட்டில் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படிப்பிடிப்பு நடந்தது.பிறகு மறுபடியும் சென்னைக்கு வந்து இப்போது படத்தை நிறைவு செய்து விட்டார்கள்.
அறிமுக நடிகனாக ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தின் மொத்த செலவு படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன், விளம்பர செலவு, வெளியீட்டு செலவு எல்லாம் சேர்ந்தால் எப்படியும் நாற்பது கோடியை நெருங்குமாம்.
விஷ்ணுவர்தன், ஆகாஷ்
மருமகன் என்பதால் அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல் இருக்கிறார் தயாரிப்பாளர் பிரிட்டோ. படம் மிகவும் நன்றாக வந்திருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் ஆகாஷ். தம்பி நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சிறப்பான அறிமுகம். பார்த்து ஆனந்திக்க அப்பா இல்லையே என கண்ணீர் கசிந்தாராம் அதர்வா. படத்தின் பெயரை இன்னும் சில நாட்களில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
விஜய்யின் சம்பளம் பெரிய அளவில் உயரக் காரணம் ‘மாஸ்டர்’ படம். அதை விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்தார்.பெருமளவு படத்திற்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி, கணிசமாக விளம்பரம் செய்து, விஜய் சேதுபதியை எல்லாம் படத்தில் கொண்டு வந்து என படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. விளைவு படம் பெரிதாகக் கல்லா கட்டியது. விஷ்ணுவர்தன், ஆகாஷ்கல்லூரியயில் படித்து வந்த அவரின் மகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் கல்யாணமும் நல்லபடியாக முடிய, அண்ணனைப் போல ஆகாஷ்க்கும் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. மருமகனின் ஆசையை மாமனார் பிரிட்டோ நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். உடனே மாஸ்டர் படத்திற்குப் பிறகு அடுத்த படத்தைத் தொடங்குவதாக அறிவிப்பு செய்தார். இந்தியில் பிஸியாக இருந்த விஷ்ணுவர்தனை தயாரிப்புக்குள் கொண்டு வந்து கோலாகலமாக ஆரம்பித்தார்கள். அப்போது விருமனில் மட்டும் நடித்திருந்த அதிதி சங்கரை ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சில நாட்களுக்குப் பிறகு போர்ச்சுக்கல் நாட்டில் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படிப்பிடிப்பு நடந்தது.பிறகு மறுபடியும் சென்னைக்கு வந்து இப்போது படத்தை நிறைவு செய்து விட்டார்கள்.அறிமுக நடிகனாக ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தின் மொத்த செலவு படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன், விளம்பர செலவு, வெளியீட்டு செலவு எல்லாம் சேர்ந்தால் எப்படியும் நாற்பது கோடியை நெருங்குமாம். விஷ்ணுவர்தன், ஆகாஷ்மருமகன் என்பதால் அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல் இருக்கிறார் தயாரிப்பாளர் பிரிட்டோ. படம் மிகவும் நன்றாக வந்திருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் ஆகாஷ். தம்பி நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சிறப்பான அறிமுகம். பார்த்து ஆனந்திக்க அப்பா இல்லையே என கண்ணீர் கசிந்தாராம் அதர்வா. படத்தின் பெயரை இன்னும் சில நாட்களில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.