“நேசித்துச் செய்திருக்கிறேன்; பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” – அப்டேட் தந்த சமந்தா

“நேசித்துச் செய்திருக்கிறேன்; பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” – அப்டேட் தந்த சமந்தா post thumbnail image

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து வந்தார்.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஆண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து இந்தியில் ‘citadel’ என்ற வெப்சீரியஸில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.

‘குஷி’ படம்

இதை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த சமந்தா, “கொஞ்ச நாள்கள் ஓய்வெடுக்க விரும்புகிறேன். என்னுடைய ஒவ்வொரு கடினமான போராட்டங்களின் போதும் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னைப் பார்த்துக் கொண்ட என் குடும்பத்தினருக்கு நன்றி. உங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நிச்சையம் ஏதோவொன்று செய்வேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஓய்விலிருந்து பணிக்குத் திரும்பியுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “ஓய்விலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த கொஞ்ச நாள்களில் எந்த வேலையும் இல்லை எனக்கு.

சமந்தா | Samantha

இருப்பினும், என் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்துள்ளேன். இது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். இந்த பாட்காஸ்ட் அடுத்த வாரம் வெளியாகும். அதை மிகுந்த விருப்பத்துடன் நேசித்துச் செய்திருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து வந்தார்.அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஆண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து இந்தியில் ‘citadel’ என்ற வெப்சீரியஸில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார். ‘குஷி’ படம்இதை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த சமந்தா, “கொஞ்ச நாள்கள் ஓய்வெடுக்க விரும்புகிறேன். என்னுடைய ஒவ்வொரு கடினமான போராட்டங்களின் போதும் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னைப் பார்த்துக் கொண்ட என் குடும்பத்தினருக்கு நன்றி. உங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நிச்சையம் ஏதோவொன்று செய்வேன்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது ஓய்விலிருந்து பணிக்குத் திரும்பியுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “ஓய்விலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த கொஞ்ச நாள்களில் எந்த வேலையும் இல்லை எனக்கு. சமந்தா | Samanthaஇருப்பினும், என் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்துள்ளேன். இது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். இந்த பாட்காஸ்ட் அடுத்த வாரம் வெளியாகும். அதை மிகுந்த விருப்பத்துடன் நேசித்துச் செய்திருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Related Post