“அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!” – கிரண் ராவ்

“அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!” – கிரண் ராவ் post thumbnail image

2021ம் ஆண்டில் செய்த கேமியோவிற்குப் பிறகு ஷாருக் கானைப் போல ஆமீர் கானுக்கும் நான்கு ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஷாருக்கான் கம்பேக் கொடுத்து ‘ஜவான்’ மிக்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அமீர் கான் ரீமேக் செய்து நடித்த ‘லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி 2015-ம் ஆண்டு ஆமீர் கான் அளித்திருந்த பேட்டியில், “எனது மனைவி இந்நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்குச் செல்லாம் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறினார்” என்று கூறியதை மேற்கோள் காட்டி அமீர் கான் படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று படத்தின் வெளியீடு சமயத்தில் சர்ச்கைகள் கிளப்பின. இந்தக் காரணங்களால் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

Laal Singh Chaddha

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ்,” ‘லால் சிங் சத்தா’ படத்திற்கான உழைப்பும் அதன் வெற்றிக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. அது நிச்சயமாக அமீர் கான் மனதையும் ஆழமாக பாதித்தது” என்றார்.

அதுமட்டுமின்றி பல நேர்காணல்களில் விவாகரத்து பெற்ற பிறகும் கிரண் ராவை, அமீர் கானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிடுவது பற்றிப் பேசியவர், “பல நேர்காணல்களில் என்னை அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என் பெயர் ஞாபத்தில் இருப்பதில்லை. எனக்கும் அப்படியே கேட்டுப் பழகிவிட்டதால் அது என்னை பெரிய அளவிற்குத் தொந்தரவு செய்யவில்லை.

கிரண் ராவ்

இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் வேண்டும். அந்த விருப்பம் எனக்கும் இருக்கிறது. தனியாக இருப்பவர்கள் மட்டுமல்ல திருமண உறவிலும் இது அவசியம். திருமண உறவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் இடமளிக்க வேண்டும், இருவருக்கும் தனி அடையாள வைத்திருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

 2021ம் ஆண்டில் செய்த கேமியோவிற்குப் பிறகு ஷாருக் கானைப் போல ஆமீர் கானுக்கும் நான்கு ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை.ஷாருக்கான் கம்பேக் கொடுத்து ‘ஜவான்’ மிக்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அமீர் கான் ரீமேக் செய்து நடித்த ‘லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி 2015-ம் ஆண்டு ஆமீர் கான் அளித்திருந்த பேட்டியில், “எனது மனைவி இந்நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்குச் செல்லாம் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறினார்” என்று கூறியதை மேற்கோள் காட்டி அமீர் கான் படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று படத்தின் வெளியீடு சமயத்தில் சர்ச்கைகள் கிளப்பின. இந்தக் காரணங்களால் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. Laal Singh Chaddhaஇந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ்,” ‘லால் சிங் சத்தா’ படத்திற்கான உழைப்பும் அதன் வெற்றிக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. அது நிச்சயமாக அமீர் கான் மனதையும் ஆழமாக பாதித்தது” என்றார். அதுமட்டுமின்றி பல நேர்காணல்களில் விவாகரத்து பெற்ற பிறகும் கிரண் ராவை, அமீர் கானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிடுவது பற்றிப் பேசியவர், “பல நேர்காணல்களில் என்னை அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என் பெயர் ஞாபத்தில் இருப்பதில்லை. எனக்கும் அப்படியே கேட்டுப் பழகிவிட்டதால் அது என்னை பெரிய அளவிற்குத் தொந்தரவு செய்யவில்லை. கிரண் ராவ்இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் வேண்டும். அந்த விருப்பம் எனக்கும் இருக்கிறது. தனியாக இருப்பவர்கள் மட்டுமல்ல திருமண உறவிலும் இது அவசியம். திருமண உறவில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் இடமளிக்க வேண்டும், இருவருக்கும் தனி அடையாள வைத்திருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார். 

Related Post