Aamir khan: `வாவ்… இத்தனை பிரபலங்களா!’ திரண்டு வந்து வாழ்த்திய பாலிவுட்!

Aamir khan: `வாவ்… இத்தனை பிரபலங்களா!’ திரண்டு வந்து வாழ்த்திய பாலிவுட்! post thumbnail image

நடிகர் ஆமீர் கான் மகள் இரா கான் இம்மாத தொடக்கத்தில் 3ம் தேதி மும்பையில் தனது காதலன் நுபுர் சகாரியாவை பதிவுத்திருமணம் செய்து கொண்டு ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்காக மும்பையில் நேற்று இரவு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளும்படி பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆமீர் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு கொடுத்திருந்தார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்டு சென்டரில் இந்தத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன், பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி, ரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர நடிகை கேத்ரீனா கைஃப், நடிகர் சூர்யா, நாக சைதன்யா, டாப்சி, மாதுரி தீட்ஷித், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகர் ஷாருக் கான் தன் மனைவி கெளரி கானுடன் கலந்து கொண்டார். நடிகர் ரன்தீப் ஹோடா, பர்ஹான் அக்தர், சன்னி லியோன் ஆகியோர் தங்கள் துணைவருடன் கலந்து கொண்டனர். நடிகை அமீஷா பட்டேல், தயாரிப்பாளர் ஷோயா அக்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகை சுஷ்மிதா சென் கருப்பு கலர் சேலையில் மிகவும் வித்தியாசமாக வந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

அவர் தன் முன்னாள் காதலன் ரோஹ்மனுடன் வந்திருந்தார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்புக்கு நடிகர் இம்ரான் கான் தன் காதலியுடன் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு 9 மாநில உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் குஜராத் மற்றும் மராத்தி உணவு பிரதானமாக இடம் பிடித்திருந்தது. திருமண வரவேற்புக்கு வந்தவர்களை ஆமீர்கான் தனிப்பட்ட முறையில் வரவேற்றார். விருந்துக்கு 2500 பேருக்கு ஆமீர் கான் அழைப்பு கொடுத்திருந்தார்.

 நடிகர் ஆமீர் கான் மகள் இரா கான் இம்மாத தொடக்கத்தில் 3ம் தேதி மும்பையில் தனது காதலன் நுபுர் சகாரியாவை பதிவுத்திருமணம் செய்து கொண்டு ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொண்டார்.பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்காக மும்பையில் நேற்று இரவு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளும்படி பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆமீர் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு கொடுத்திருந்தார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்டு சென்டரில் இந்தத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன், பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி, ரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர நடிகை கேத்ரீனா கைஃப், நடிகர் சூர்யா, நாக சைதன்யா, டாப்சி, மாதுரி தீட்ஷித், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகர் ஷாருக் கான் தன் மனைவி கெளரி கானுடன் கலந்து கொண்டார். நடிகர் ரன்தீப் ஹோடா, பர்ஹான் அக்தர், சன்னி லியோன் ஆகியோர் தங்கள் துணைவருடன் கலந்து கொண்டனர். நடிகை அமீஷா பட்டேல், தயாரிப்பாளர் ஷோயா அக்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகை சுஷ்மிதா சென் கருப்பு கலர் சேலையில் மிகவும் வித்தியாசமாக வந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அவர் தன் முன்னாள் காதலன் ரோஹ்மனுடன் வந்திருந்தார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்புக்கு நடிகர் இம்ரான் கான் தன் காதலியுடன் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு 9 மாநில உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் குஜராத் மற்றும் மராத்தி உணவு பிரதானமாக இடம் பிடித்திருந்தது. திருமண வரவேற்புக்கு வந்தவர்களை ஆமீர்கான் தனிப்பட்ட முறையில் வரவேற்றார். விருந்துக்கு 2500 பேருக்கு ஆமீர் கான் அழைப்பு கொடுத்திருந்தார். 

Related Post