“`புது வீடு வாங்கு, வெளிநாட்டுக்குப் போயிட்டு வா’ன்னு சொல்லிருக்கேன்!”- கனகா குறித்து குட்டி பத்மினி

“`புது வீடு வாங்கு, வெளிநாட்டுக்குப் போயிட்டு வா’ன்னு சொல்லிருக்கேன்!”- கனகா குறித்து குட்டி பத்மினி post thumbnail image

கங்கை அமரன், ராமராஜன் கூட்டணியில் உருவான `கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. தமிழ் சினிமாவின் கறுப்பு வெள்ளை காலங்களில் கோலோச்சிய நடிகை தேவிகாவின் மகள். ரஜினியுடன் `அதிசயப்பிறவி’, பிரபுவுடன் `கும்பகரை தங்கையா’ உட்படப் பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் `விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில், மறைந்த நடிகர் விவேக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் வெளியான `நரசிம்மம்’ படத்திற்குப் பின், சினிமாவிலிருந்து விலகினார். தன் அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகள் ஆகிய காரணங்களினால் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்.

தற்போது, ‘சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவர் மட்டுமே இருக்கிறார். அவரது வீட்டில் வாட்ச்மேன், வேலைக்காரர்கள்கூட இல்லை. வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்கிறார். அவரது அப்பாவுடன் தகராறு’ என்றெல்லாம் தகவல்கள் பரவின. இந்நிலையில் நேற்று நடிகையும், தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, கனகா உடனான தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவைச் சந்தித்தது மகிழ்ச்சி” என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின.

குட்டி பத்மினி, கனகா

கனகாவைச் சந்தித்தது குறித்து குட்டி பத்மினியிடம் பேசினேன். “கனகா ரொம்ப நல்லா இருக்காங்க. சந்தோஷமா இருக்காங்க. அவங்களுக்கும் அவங்க அப்பாவுக்குமிடையே சமாதானம் ஆனதாக சொன்னாங்க. கேட்க சந்தோஷமா இருந்தது. யதேச்சையாக கனகா வீட்டைக் கடந்து போகும் போது, அவங்க வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தேன். அவங்க யாரையும் சந்திக்கறதில்ல. பார்க்க மாட்டேன்றாங்கன்னு நிறைய செய்திகள் நானும் கேள்விப்பட்டிருந்தாலும், அவங்க வீட்டில் லைட் எரிஞ்சிட்டு இருந்ததால, உள்ளே ஆள் இருப்பாங்க. வெளியே வரும் போது பார்த்துக்கலாம்னு இருந்தேன். அவங்க வீட்டுக்கு வெளியே கார்லயே காத்திருந்தேன்.

அந்தச் சமயத்துல கனகா வெளியே வந்தாங்க. பார்த்துப் பேசினேன். என்னைப் பார்த்ததுல அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். தேவிகா மேம் பத்தி நிறைய பேசினோம். நானும் உங்க அம்மா மாதிரிதான்னு கனகாகிட்டே சொன்னேன். அதுக்கு அவங்க, ‘நீங்க எப்படி எனக்கு அம்மாவாக முடியும். அம்மாவோட படத்துல நீங்க அவங்க பொண்ணாகத்தானே நடிச்சிருக்கீங்க. அதனால நீங்க அக்காதான்’னு சொன்னாங்க.

கனகா வீடு, அவங்க அம்மா வாழ்ந்த வீடுன்னால, இப்ப பார்க்கறதுக்கு பாழடைந்த கோயில் மாதிரி ஆகிடுச்சு. இப்படி ஒரு வீட்டுல ஏன் இருக்கே, அழகான பிளாட்ல இருந்தால், பாதுகாப்பும் இருக்குமேன்னு சொன்னேன். கேட்டுக்கிட்டாங்க.

கரகாட்டக்காரன் படத்தில்..

கனகாவோட இடத்தை சாலை விரிவாக்கத்தின் போது அரசாங்கம் எடுத்திருந்ததாகவும், அதுக்கான காம்பன்சேஷன் தொகை வரவேண்டியிருக்குதுன்னும் சொன்னாங்க. உடனே நான் அவங்ககிட்ட, இது விஷயமா சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, அந்தத் தொகையை வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆகல. குழந்தையும் இல்ல. இந்தச் சொத்து யாருக்கோதானே போகப்போகுது. இப்படி இருக்க வேணாம். புதுவீடு வாங்கு. வாழ்க்கையை அனுபவி… வெளிநாட்டுக்கு டூர் போயிட்டு வான்னு பல விஷயங்கள் சொன்னேன். அவங்களுக்கு வெளிநாடு போகப்பிடிக்கும்னு சொன்னாங்க. அப்புறமென்ன, வெளிநாடு போய் சுத்திப் பாரு. வாழ்க்கையைக் கொண்டாடுன்னு சொன்னேன். சந்தோஷமாகக் கேட்டுக்கிட்டாங்க. அவங்களை ரொம்ப நாள்களுக்குப் பிறகு பார்த்திருந்தாலும்கூட, கனகாவை முன்னாடியே வந்து பார்த்திருக்கலாமேன்னு மன உறுத்தல் ஆகிடுச்சு. இவ்ளோ நாள் ஏன் பார்க்காமல் விட்டுட்டோம்னு தோணுச்சு. எல்லாத்துக்கும் ஒரு நேரம் அமையணுமே!” என்கிறார் குட்டி பத்மினி.

 கங்கை அமரன், ராமராஜன் கூட்டணியில் உருவான `கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. தமிழ் சினிமாவின் கறுப்பு வெள்ளை காலங்களில் கோலோச்சிய நடிகை தேவிகாவின் மகள். ரஜினியுடன் `அதிசயப்பிறவி’, பிரபுவுடன் `கும்பகரை தங்கையா’ உட்படப் பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் `விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில், மறைந்த நடிகர் விவேக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் வெளியான `நரசிம்மம்’ படத்திற்குப் பின், சினிமாவிலிருந்து விலகினார். தன் அம்மா தேவிகாவின் மறைவு, தனிப்பட்ட பிரச்னைகள் ஆகிய காரணங்களினால் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்.தற்போது, ‘சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவர் மட்டுமே இருக்கிறார். அவரது வீட்டில் வாட்ச்மேன், வேலைக்காரர்கள்கூட இல்லை. வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்கிறார். அவரது அப்பாவுடன் தகராறு’ என்றெல்லாம் தகவல்கள் பரவின. இந்நிலையில் நேற்று நடிகையும், தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, கனகா உடனான தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “பல வருடங்களுக்குப் பிறகு என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், என் அன்புக்குரிய சகோதரியுமான கனகாவைச் சந்தித்தது மகிழ்ச்சி” என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின.குட்டி பத்மினி, கனகாகனகாவைச் சந்தித்தது குறித்து குட்டி பத்மினியிடம் பேசினேன். “கனகா ரொம்ப நல்லா இருக்காங்க. சந்தோஷமா இருக்காங்க. அவங்களுக்கும் அவங்க அப்பாவுக்குமிடையே சமாதானம் ஆனதாக சொன்னாங்க. கேட்க சந்தோஷமா இருந்தது. யதேச்சையாக கனகா வீட்டைக் கடந்து போகும் போது, அவங்க வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தேன். அவங்க யாரையும் சந்திக்கறதில்ல. பார்க்க மாட்டேன்றாங்கன்னு நிறைய செய்திகள் நானும் கேள்விப்பட்டிருந்தாலும், அவங்க வீட்டில் லைட் எரிஞ்சிட்டு இருந்ததால, உள்ளே ஆள் இருப்பாங்க. வெளியே வரும் போது பார்த்துக்கலாம்னு இருந்தேன். அவங்க வீட்டுக்கு வெளியே கார்லயே காத்திருந்தேன். அந்தச் சமயத்துல கனகா வெளியே வந்தாங்க. பார்த்துப் பேசினேன். என்னைப் பார்த்ததுல அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். தேவிகா மேம் பத்தி நிறைய பேசினோம். நானும் உங்க அம்மா மாதிரிதான்னு கனகாகிட்டே சொன்னேன். அதுக்கு அவங்க, ‘நீங்க எப்படி எனக்கு அம்மாவாக முடியும். அம்மாவோட படத்துல நீங்க அவங்க பொண்ணாகத்தானே நடிச்சிருக்கீங்க. அதனால நீங்க அக்காதான்’னு சொன்னாங்க.கனகா வீடு, அவங்க அம்மா வாழ்ந்த வீடுன்னால, இப்ப பார்க்கறதுக்கு பாழடைந்த கோயில் மாதிரி ஆகிடுச்சு. இப்படி ஒரு வீட்டுல ஏன் இருக்கே, அழகான பிளாட்ல இருந்தால், பாதுகாப்பும் இருக்குமேன்னு சொன்னேன். கேட்டுக்கிட்டாங்க. கரகாட்டக்காரன் படத்தில்..கனகாவோட இடத்தை சாலை விரிவாக்கத்தின் போது அரசாங்கம் எடுத்திருந்ததாகவும், அதுக்கான காம்பன்சேஷன் தொகை வரவேண்டியிருக்குதுன்னும் சொன்னாங்க. உடனே நான் அவங்ககிட்ட, இது விஷயமா சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, அந்தத் தொகையை வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆகல. குழந்தையும் இல்ல. இந்தச் சொத்து யாருக்கோதானே போகப்போகுது. இப்படி இருக்க வேணாம். புதுவீடு வாங்கு. வாழ்க்கையை அனுபவி… வெளிநாட்டுக்கு டூர் போயிட்டு வான்னு பல விஷயங்கள் சொன்னேன். அவங்களுக்கு வெளிநாடு போகப்பிடிக்கும்னு சொன்னாங்க. அப்புறமென்ன, வெளிநாடு போய் சுத்திப் பாரு. வாழ்க்கையைக் கொண்டாடுன்னு சொன்னேன். சந்தோஷமாகக் கேட்டுக்கிட்டாங்க. அவங்களை ரொம்ப நாள்களுக்குப் பிறகு பார்த்திருந்தாலும்கூட, கனகாவை முன்னாடியே வந்து பார்த்திருக்கலாமேன்னு மன உறுத்தல் ஆகிடுச்சு. இவ்ளோ நாள் ஏன் பார்க்காமல் விட்டுட்டோம்னு தோணுச்சு. எல்லாத்துக்கும் ஒரு நேரம் அமையணுமே!” என்கிறார் குட்டி பத்மினி. 

Related Post