’குஷி’, ’ஒன் டூ த்ரீ’, ’கில்லி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர், பிரபுதேவாவின் தம்பி, பிரபல டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத். தனது வீட்டில் குடியிருப்பவர் வாடகை தராததால் அந்த வீட்டை திறக்கமுடியாதபடி வெல்டிங் வைத்துப் பூட்டியதாக சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.
சொந்த வீட்டையே வெல்டிங் வைக்கும் என்ன பிரச்சினை? நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான நாகேந்திர பிரசாத்தைத் தொடர்புகொண்டு கேட்டேன்…
”நடிகர்கள் தங்களது சொந்த வீடுகளை கவனிக்க முடியாத சூழலில், தனியார் ஏஜென்சிகள் மூலம் வாடகைத் தொகைகளைப் பெறுவதை வழகக்கமாகச் செய்துவருகிறார்கள். அப்படித்தான், நானும் எஸ்.டி.எஸ்.கே என்கிற ஏஜென்சி மூலம் தேனாம்பேட்டையில் உள்ள எனது வீட்டை வாடகைக்கு விட்டேன். ஏஜென்சி எனக்கு மாதம் 36,000 ரூபாய் வாடகை கொடுத்துவந்தது. ஒரு வருசம் எனக்கு மாதா மாதம் கரெக்டா 36,000 ரூபாய் வாடகை வந்துக்கிட்டிருந்தது. ஆனா, கடந்த ஒரு ஒன்னரை வருடமா ஏஜென்சி எனக்கு வாடகையே கொடுக்கல.
நாகேந்திர பிரசாத் வீட்டில் குடியிருக்கும் விக்னேஷ்
ஏஜென்சி உரிமையாளரையும் தொடர்பு கொள்ள முடியல. அதனால, என்னோட வீட்டைக் காலி பண்ணச் சொல்லி ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அப்போதும், எனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டை காலிசெய்யவில்லை. இதனால, நேர்ல போயி பார்த்துப் பேசினேன். அப்போதான், ‘நாங்க வாடகைக்கு வர்ல, 25 லட்ச ரூபாய் கொடுத்துட்டு லீஸுக்கு வந்திருக்கோம்’ அப்படின்னு சொல்லி என்னை அதிர்ச்சி அடைய வெச்சாங்க.
’நான், உங்களை லீசுக்கு விடல. ஏஜென்சி மூலமா வாடகைக்குத்தான் விட்டேன். லீசுக்கு விடுறதா எந்த அக்ரிமென்ட்டும் நான் போடல. எனக்கு, அந்த ஏஜென்சி வாடகைதான் அனுப்பிக்கிட்டிருந்தது. இப்போ, அந்த ஏஜெண்ட் தலைமறைவாகிட்டான். அதனால, நீங்க தயவுசெஞ்சு வீட்டை காலி பண்ணிடுங்க’ன்னு சொன்னேன். அவங்களும் ரெண்டு மாசம் டைம் கொடுங்க. காலி பண்ணிடுறோம்னு ரொம்ப பாவமாத்தான் சொன்னாங்க. ஆனா, ரெண்டு மாசத்துக்கு மேலாகியும் காலி பண்ணாததால ஏன் காலி பண்ணலைன்னு போயி திரும்பக் கேட்டேன். அதுக்கு அவங்க, ‘கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கோம். தீர்ப்பு வந்தபிறகுதான் காலி பண்ணுவோம்’னு சொல்லிட்டாங்க.
ஒருகட்டத்துல, ‘நீங்க சினிமா நடிகர். நாங்க மீடியாவுக்கு போவோம்’னு என்னையே மிரட்டுனாங்க. பொதுவா, இந்த சமூகத்துல நடிகர்னாலே தப்பே செய்யலைன்னாலும் அவரைத் தவறா பார்க்குற கண்ணோட்டமும் வசதிங்குறதால இவங்கதான் தப்பு பண்ணியிருக்காங்கங்குற எண்ணமும் ஈஸியா வந்துடுது. இதனால, உடனடியா போயி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். போலீஸும் அஞ்சு ஆறு தடவை பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, என் வீட்டுல குடியிருக்கிறவங்க வரவே இல்லை. ஒன்னரை வருஷமா இழுத்துட்டே இருக்காரு.
நாகேந்திர பிரசாத்
ஒவ்வொரு முறையும் அவங்கக்கிட்ட பேசுறதுக்காக போவோம். ஆனா, வீட்டை பூட்டிட்டு எங்க போவாங்கன்னே தெரியாது. ஒவ்வொரு முறையும் என்னோட வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைஞ்சே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். எவ்ளோ மன வருத்தமா இருக்கும் யோசிச்சு பாருங்க.
வேற வழியே இல்லாமத்தான் வீட்டை காலிசெய்யாதவர் பேச்சு வார்த்தைக்கு வருவார்ன்னுதான் வீட்டுக்கு வெல்டிங் வெச்சு பூட்டவேண்டியதாகிடுச்சு. அதுவும், நாய் உள்ள இருக்கிறது எனக்கு தெரியாது. அது ஒரு வாயில்லா ஜீவன், பாவம். நாய் உள்ள இருக்கிறது தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணியிருக்கவே மாட்டேன். நாய் உள்ள இருக்குன்னு தெரிஞ்சதுமே வெல்டிங் ரிமூவ் பண்ணிட்டேன். பாவம்… அந்த நாயை வீட்டுக்குள்ளே ஒரு ரூம்ல பூட்டி வெச்சிருக்காரு. எப்படிப்பட்ட மனுஷனா இருப்பாரு? அவர், ஏஜெண்டிடம் 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததா சொல்றாரு. ஆனா, என்னோட ஏமாற்றம்தான் பெருசுங்குறதை புரிஞ்சுக்க மாட்டேங்குறாரு. அவர், லீசுக்கு பணம் கொடுத்தாரான்னுகூட தெரியல. என் வீட்டை அபகரிக்கிறதுக்காக ஏஜென்சிகூட சேர்ந்துக்கிட்டு ஏதாவது பன்றாங்களோன்னு சந்தேகமா இருக்கு.
பிரபுதேவா
அந்த கேர் டேக்கர் எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்துமேல நிறையப் பேர் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. மீடியா தேவையில்லாம அண்ணன் பிரபுதேவாவை எல்லாம் இழுக்கிறாங்க. எங்கக் குடும்பத்துக்கு வேணும்னே கெட்ட பேர் உண்டாக்க நினைக்குறாங்க. வீட்டையும் இழந்துட்டு கெட்ட பேர் வாங்குறது எவ்ளோ வலி, வேதனையைக் கொடுக்கும்?
நான், என்ன அண்ணன் பிரபுதேவாவா? நானும் ஒரு சராசரி மனுஷன் தான். எனக்கு லோன் கட்டணும், குழந்தைங்க இருக்காங்க, குடும்பம் இருக்கு, நிறைய கமிட்மெண்ட் இருக்கு. 1500 சதுர அடி வீடு. ஒன்றரை வருசமா வாடகை வரல. எனக்கு எவ்ளோ இழப்பா இருக்கும்? இதனால, தினமும் மன உளைச்சல்தான். ” என்கிறார் வேதனையுடன்.
’குஷி’, ’ஒன் டூ த்ரீ’, ’கில்லி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர், பிரபுதேவாவின் தம்பி, பிரபல டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத். தனது வீட்டில் குடியிருப்பவர் வாடகை தராததால் அந்த வீட்டை திறக்கமுடியாதபடி வெல்டிங் வைத்துப் பூட்டியதாக சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.சொந்த வீட்டையே வெல்டிங் வைக்கும் என்ன பிரச்சினை? நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான நாகேந்திர பிரசாத்தைத் தொடர்புகொண்டு கேட்டேன்…”நடிகர்கள் தங்களது சொந்த வீடுகளை கவனிக்க முடியாத சூழலில், தனியார் ஏஜென்சிகள் மூலம் வாடகைத் தொகைகளைப் பெறுவதை வழகக்கமாகச் செய்துவருகிறார்கள். அப்படித்தான், நானும் எஸ்.டி.எஸ்.கே என்கிற ஏஜென்சி மூலம் தேனாம்பேட்டையில் உள்ள எனது வீட்டை வாடகைக்கு விட்டேன். ஏஜென்சி எனக்கு மாதம் 36,000 ரூபாய் வாடகை கொடுத்துவந்தது. ஒரு வருசம் எனக்கு மாதா மாதம் கரெக்டா 36,000 ரூபாய் வாடகை வந்துக்கிட்டிருந்தது. ஆனா, கடந்த ஒரு ஒன்னரை வருடமா ஏஜென்சி எனக்கு வாடகையே கொடுக்கல. நாகேந்திர பிரசாத் வீட்டில் குடியிருக்கும் விக்னேஷ் ஏஜென்சி உரிமையாளரையும் தொடர்பு கொள்ள முடியல. அதனால, என்னோட வீட்டைக் காலி பண்ணச் சொல்லி ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அப்போதும், எனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டை காலிசெய்யவில்லை. இதனால, நேர்ல போயி பார்த்துப் பேசினேன். அப்போதான், ‘நாங்க வாடகைக்கு வர்ல, 25 லட்ச ரூபாய் கொடுத்துட்டு லீஸுக்கு வந்திருக்கோம்’ அப்படின்னு சொல்லி என்னை அதிர்ச்சி அடைய வெச்சாங்க. ’நான், உங்களை லீசுக்கு விடல. ஏஜென்சி மூலமா வாடகைக்குத்தான் விட்டேன். லீசுக்கு விடுறதா எந்த அக்ரிமென்ட்டும் நான் போடல. எனக்கு, அந்த ஏஜென்சி வாடகைதான் அனுப்பிக்கிட்டிருந்தது. இப்போ, அந்த ஏஜெண்ட் தலைமறைவாகிட்டான். அதனால, நீங்க தயவுசெஞ்சு வீட்டை காலி பண்ணிடுங்க’ன்னு சொன்னேன். அவங்களும் ரெண்டு மாசம் டைம் கொடுங்க. காலி பண்ணிடுறோம்னு ரொம்ப பாவமாத்தான் சொன்னாங்க. ஆனா, ரெண்டு மாசத்துக்கு மேலாகியும் காலி பண்ணாததால ஏன் காலி பண்ணலைன்னு போயி திரும்பக் கேட்டேன். அதுக்கு அவங்க, ‘கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கோம். தீர்ப்பு வந்தபிறகுதான் காலி பண்ணுவோம்’னு சொல்லிட்டாங்க. ஒருகட்டத்துல, ‘நீங்க சினிமா நடிகர். நாங்க மீடியாவுக்கு போவோம்’னு என்னையே மிரட்டுனாங்க. பொதுவா, இந்த சமூகத்துல நடிகர்னாலே தப்பே செய்யலைன்னாலும் அவரைத் தவறா பார்க்குற கண்ணோட்டமும் வசதிங்குறதால இவங்கதான் தப்பு பண்ணியிருக்காங்கங்குற எண்ணமும் ஈஸியா வந்துடுது. இதனால, உடனடியா போயி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். போலீஸும் அஞ்சு ஆறு தடவை பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, என் வீட்டுல குடியிருக்கிறவங்க வரவே இல்லை. ஒன்னரை வருஷமா இழுத்துட்டே இருக்காரு. நாகேந்திர பிரசாத்ஒவ்வொரு முறையும் அவங்கக்கிட்ட பேசுறதுக்காக போவோம். ஆனா, வீட்டை பூட்டிட்டு எங்க போவாங்கன்னே தெரியாது. ஒவ்வொரு முறையும் என்னோட வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைஞ்சே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். எவ்ளோ மன வருத்தமா இருக்கும் யோசிச்சு பாருங்க. வேற வழியே இல்லாமத்தான் வீட்டை காலிசெய்யாதவர் பேச்சு வார்த்தைக்கு வருவார்ன்னுதான் வீட்டுக்கு வெல்டிங் வெச்சு பூட்டவேண்டியதாகிடுச்சு. அதுவும், நாய் உள்ள இருக்கிறது எனக்கு தெரியாது. அது ஒரு வாயில்லா ஜீவன், பாவம். நாய் உள்ள இருக்கிறது தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணியிருக்கவே மாட்டேன். நாய் உள்ள இருக்குன்னு தெரிஞ்சதுமே வெல்டிங் ரிமூவ் பண்ணிட்டேன். பாவம்… அந்த நாயை வீட்டுக்குள்ளே ஒரு ரூம்ல பூட்டி வெச்சிருக்காரு. எப்படிப்பட்ட மனுஷனா இருப்பாரு? அவர், ஏஜெண்டிடம் 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததா சொல்றாரு. ஆனா, என்னோட ஏமாற்றம்தான் பெருசுங்குறதை புரிஞ்சுக்க மாட்டேங்குறாரு. அவர், லீசுக்கு பணம் கொடுத்தாரான்னுகூட தெரியல. என் வீட்டை அபகரிக்கிறதுக்காக ஏஜென்சிகூட சேர்ந்துக்கிட்டு ஏதாவது பன்றாங்களோன்னு சந்தேகமா இருக்கு. பிரபுதேவாஅந்த கேர் டேக்கர் எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்துமேல நிறையப் பேர் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. மீடியா தேவையில்லாம அண்ணன் பிரபுதேவாவை எல்லாம் இழுக்கிறாங்க. எங்கக் குடும்பத்துக்கு வேணும்னே கெட்ட பேர் உண்டாக்க நினைக்குறாங்க. வீட்டையும் இழந்துட்டு கெட்ட பேர் வாங்குறது எவ்ளோ வலி, வேதனையைக் கொடுக்கும்?நான், என்ன அண்ணன் பிரபுதேவாவா? நானும் ஒரு சராசரி மனுஷன் தான். எனக்கு லோன் கட்டணும், குழந்தைங்க இருக்காங்க, குடும்பம் இருக்கு, நிறைய கமிட்மெண்ட் இருக்கு. 1500 சதுர அடி வீடு. ஒன்றரை வருசமா வாடகை வரல. எனக்கு எவ்ளோ இழப்பா இருக்கும்? இதனால, தினமும் மன உளைச்சல்தான். ” என்கிறார் வேதனையுடன்.