Pippa: ஏ.ஆர்.ரஹ்மானின் பாலிவுட் படப் பாடலால் வங்காளத்தில் வெடித்த சர்ச்சை – பின்னணி இதுதான்!

Pippa: ஏ.ஆர்.ரஹ்மானின் பாலிவுட் படப் பாடலால் வங்காளத்தில் வெடித்த சர்ச்சை – பின்னணி இதுதான்! post thumbnail image

ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணால் தாக்கூர், பிரியன்ஷு பைன்யுலி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் Amazon Prime Video ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது `Pippa’ திரைப்படம்.

1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயானப் போரில் கிழக்குப் பகுதியில் 45வது டேங்க் ஸ்குவாட்ரனில் போர் செய்த ராணுவ வீரரான பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தாவைப் பற்றிய கதை இது. தேசத்திற்காகப் போராடும் பிரிகேடியரின் தேசப்பற்று, குடும்பம், காதல் எனப் படபடக்கும் போர்க்களத்தில் நடக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நவீன இசைக் கருவிகள், புதிய இசைத் தயாரிப்பு முறைகள் எனத் தனது எல்லா படங்களிலும் தனித்துவத்துடன் நிறைய விஷயங்களைச் சேர்ப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுமட்டுமின்றி, கதையின் உணர்வையும், அதன் அர்த்தங்களையும் உணர வைக்கப் பின்னணி இசையோடு சூபி, கலிங்கத்துப்பரணி, சித்தர் – சிவனடியார் பாடல்கள் போன்றவற்றைச் சேர்ப்பது ரஹ்மானின் தனித்துவங்களில் ஒன்று.

கசி நஸ்ருல் இஸ்லாம்

அவ்வகையில், கவிதை, பாடல்கள், இசை மூலம் விடுதலை உணர்வை வங்காள மக்களிடம் கிளர்ந்து எழச் செய்த கவிஞரும், எழுத்தாளருமான கசி நஸ்ருல் இஸ்லாமின் ‘Karar Oi Louho Kopat’ என்ற பாடலின் வரிகளை ரஹ்மான் ‘Pippa’ படத்தில் புதிய மெட்டுடன் இசையமைத்துள்ளார்.

இதற்குத்தான் தற்போது எதிர்வினை கிளம்பியுள்ளது. “‘Karar Oi Louho Kopat‘ பாடலின் மெட்டுகளை அனல் பறக்கும் விடுதலை உணர்வுடன் இயற்றியிருப்பார் புரட்சிக் கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம். அவரது பாடல்களும், கவிதைகளும் வங்காள மக்களிடையே இன்றுவரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ரஹ்மான் அதை மெல்லிய மெட்டுகளால் இசையமைத்து கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் விடுதலையுணர்வை மென்மையாக்கிவிட்டார்” என்று வங்காளத்தைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Pippa

இது குறித்துப் பேசிய கசி நஸ்ருல் இஸ்லாமின் குடும்பத்தினரும் இதே விமர்சனங்களை முன்வைத்து, படத்திருந்து இப்பாடலை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தச் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள ‘Pippa’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராய் கபூர் பிலிம்ஸ், “கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை, பாடல், இசை மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அதன் காரணமாகவே அவரின் பாடலைப் படத்தில் இடம்பெறச் செய்தோம். வங்கதேசத்தின் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இப்பாடலை அமைத்தோம்.

இப்பாடலைப் பயன்படுத்துவதற்காகக் கசி நஸ்ருல் இஸ்லாமின் மனைவியான மறைந்த கல்யாணி கசி மற்றும் அவரது பேரன் அனிர்பன் கசி இருவரிடமும் அனுமதி பெற்று இப்பாடல் தொடர்பான உரிமத்தை ஒப்பந்தம் செய்துகொண்டோம். மெட்டுகளை மாற்றுவதற்கான அனுமதி குறித்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7

— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023

கவிஞர் கசி நஸ்ருலின் பாடல் மீது உங்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும், உணர்வுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கலையை ரசிப்பது என்பது அவரவர் அகநிலை சார்ந்த ஒன்று. அந்தப் பாடலுக்கு நாங்கள் கொடுத்த இந்தப் புதிய வடிவம் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், கவிஞர் கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் அனல் பறக்கும் மெட்டுகளையும், விடுதலை உணர்வையும் ரஹ்மான் மென்மையாக்கி அதன் தன்மையை மாற்றிவிட்டார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் புகழ்பெற்ற பாரம்பரியமிக்கப் பாடலை புதிய மெட்டுகளுடன் அமைத்தது கசி நஸ்ருலின் அவர்களுக்கு மரியாதையைத்தான் சேர்க்கும். அதன் விடுதலையுணர்வு என்றும் மாறாது என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

 ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணால் தாக்கூர், பிரியன்ஷு பைன்யுலி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் Amazon Prime Video ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது `Pippa’ திரைப்படம்.1971-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயானப் போரில் கிழக்குப் பகுதியில் 45வது டேங்க் ஸ்குவாட்ரனில் போர் செய்த ராணுவ வீரரான பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தாவைப் பற்றிய கதை இது. தேசத்திற்காகப் போராடும் பிரிகேடியரின் தேசப்பற்று, குடும்பம், காதல் எனப் படபடக்கும் போர்க்களத்தில் நடக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.நவீன இசைக் கருவிகள், புதிய இசைத் தயாரிப்பு முறைகள் எனத் தனது எல்லா படங்களிலும் தனித்துவத்துடன் நிறைய விஷயங்களைச் சேர்ப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுமட்டுமின்றி, கதையின் உணர்வையும், அதன் அர்த்தங்களையும் உணர வைக்கப் பின்னணி இசையோடு சூபி, கலிங்கத்துப்பரணி, சித்தர் – சிவனடியார் பாடல்கள் போன்றவற்றைச் சேர்ப்பது ரஹ்மானின் தனித்துவங்களில் ஒன்று.கசி நஸ்ருல் இஸ்லாம்அவ்வகையில், கவிதை, பாடல்கள், இசை மூலம் விடுதலை உணர்வை வங்காள மக்களிடம் கிளர்ந்து எழச் செய்த கவிஞரும், எழுத்தாளருமான கசி நஸ்ருல் இஸ்லாமின் ‘Karar Oi Louho Kopat’ என்ற பாடலின் வரிகளை ரஹ்மான் ‘Pippa’ படத்தில் புதிய மெட்டுடன் இசையமைத்துள்ளார். இதற்குத்தான் தற்போது எதிர்வினை கிளம்பியுள்ளது. “‘Karar Oi Louho Kopat’ பாடலின் மெட்டுகளை அனல் பறக்கும் விடுதலை உணர்வுடன் இயற்றியிருப்பார் புரட்சிக் கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாம். அவரது பாடல்களும், கவிதைகளும் வங்காள மக்களிடையே இன்றுவரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ரஹ்மான் அதை மெல்லிய மெட்டுகளால் இசையமைத்து கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் விடுதலையுணர்வை மென்மையாக்கிவிட்டார்” என்று வங்காளத்தைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.Pippaஇது குறித்துப் பேசிய கசி நஸ்ருல் இஸ்லாமின் குடும்பத்தினரும் இதே விமர்சனங்களை முன்வைத்து, படத்திருந்து இப்பாடலை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தச் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள ‘Pippa’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராய் கபூர் பிலிம்ஸ், “கவிஞர் கசி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை, பாடல், இசை மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அதன் காரணமாகவே அவரின் பாடலைப் படத்தில் இடம்பெறச் செய்தோம். வங்கதேசத்தின் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இப்பாடலை அமைத்தோம்.இப்பாடலைப் பயன்படுத்துவதற்காகக் கசி நஸ்ருல் இஸ்லாமின் மனைவியான மறைந்த கல்யாணி கசி மற்றும் அவரது பேரன் அனிர்பன் கசி இருவரிடமும் அனுமதி பெற்று இப்பாடல் தொடர்பான உரிமத்தை ஒப்பந்தம் செய்துகொண்டோம். மெட்டுகளை மாற்றுவதற்கான அனுமதி குறித்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தோம்.Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023

கவிஞர் கசி நஸ்ருலின் பாடல் மீது உங்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும், உணர்வுகளையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கலையை ரசிப்பது என்பது அவரவர் அகநிலை சார்ந்த ஒன்று. அந்தப் பாடலுக்கு நாங்கள் கொடுத்த இந்தப் புதிய வடிவம் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.இருப்பினும், கவிஞர் கசி நஸ்ருலின் பாடலில் இருக்கும் அனல் பறக்கும் மெட்டுகளையும், விடுதலை உணர்வையும் ரஹ்மான் மென்மையாக்கி அதன் தன்மையை மாற்றிவிட்டார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் புகழ்பெற்ற பாரம்பரியமிக்கப் பாடலை புதிய மெட்டுகளுடன் அமைத்தது கசி நஸ்ருலின் அவர்களுக்கு மரியாதையைத்தான் சேர்க்கும். அதன் விடுதலையுணர்வு என்றும் மாறாது என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். 

Related Post