LEO: “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா…” – கேரள ரசிகர்கள் வெள்ளத்தில் லோகேஷ் கனகராஜ்

LEO: “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா…” – கேரள ரசிகர்கள் வெள்ளத்தில் லோகேஷ் கனகராஜ் post thumbnail image

லோகேஷ் – விஜய் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது `லியோ’ திரைப்படம்.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்துவரும் இப்படம், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. இதற்கிடையில் இதன் முதல் நாள் வசூலே 148.5 கோடி எட்டியதாகப் படக்குழு அறிவித்தது. தற்போது படம் வெளியாகி 6 நாள்களான நிலையில் இப்படம் இதுவரை 400 கோடியைத் தொட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும், ஹாலிவுட்டில் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த மார்ட்டின் ஸ்கோர்செஸியின், ‘Killers of the Flower Moon’ படத்தின் முதல் நான்கு நாள் வசூல் சாதனையை ‘லியோ’ முறியடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.

Thank you Kerala for your love.. Overwhelmed, happy and grateful to see you all in Palakkad. ❤️

Due to a small injury in the crowd, I couldn’t make it to the other two venues and the press meeting. I would certainly come back to meet you all in Kerala again soon. Till then… pic.twitter.com/O2JCaJZjoV

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 24, 2023

இதற்கிடையில் ‘லியோ’ வெளியானது முதல் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார் இயக்குநர் லோகேஷ். அந்த வகையில் இன்று கேரளா, பாலக்காட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ படம் பார்த்தார். அங்கு, ரசிகர்கள் வெள்ளத்தில் அவர் எடுத்த செஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leo: “`கரு கரு கருப்பாயி’ மூலமா விஜய்க்கு இரண்டாவது பாடலை பாடின மாதிரி உணர்றேன்” – உன்னி மேனன்

இதைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ், “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா… பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி. கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால், மற்ற இரண்டு இடங்களுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. கேரளாவில் உங்கள் அனைவரையும் சந்திக்க நான் நிச்சயமாக வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEO – விஜய், லோகேஷ் கனகராஜ்தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் விஜய்க்கென தனிப் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக, பாலக்காட்டில் பெண் ரசிகர்களுக்கென தனிச் சிறப்புக் காட்சியே திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது `லியோ’ திரைப்படம்.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்துவரும் இப்படம், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. இதற்கிடையில் இதன் முதல் நாள் வசூலே 148.5 கோடி எட்டியதாகப் படக்குழு அறிவித்தது. தற்போது படம் வெளியாகி 6 நாள்களான நிலையில் இப்படம் இதுவரை 400 கோடியைத் தொட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும், ஹாலிவுட்டில் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த மார்ட்டின் ஸ்கோர்செஸியின், ‘Killers of the Flower Moon’ படத்தின் முதல் நான்கு நாள் வசூல் சாதனையை ‘லியோ’ முறியடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.Thank you Kerala for your love.. Overwhelmed, happy and grateful to see you all in Palakkad. ❤️Due to a small injury in the crowd, I couldn’t make it to the other two venues and the press meeting. I would certainly come back to meet you all in Kerala again soon. Till then… pic.twitter.com/O2JCaJZjoV— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 24, 2023

இதற்கிடையில் ‘லியோ’ வெளியானது முதல் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார் இயக்குநர் லோகேஷ். அந்த வகையில் இன்று கேரளா, பாலக்காட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ படம் பார்த்தார். அங்கு, ரசிகர்கள் வெள்ளத்தில் அவர் எடுத்த செஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Leo: “`கரு கரு கருப்பாயி’ மூலமா விஜய்க்கு இரண்டாவது பாடலை பாடின மாதிரி உணர்றேன்” – உன்னி மேனன் இதைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ், “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா… பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி. கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால், மற்ற இரண்டு இடங்களுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. கேரளாவில் உங்கள் அனைவரையும் சந்திக்க நான் நிச்சயமாக வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.LEO – விஜய், லோகேஷ் கனகராஜ்தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் விஜய்க்கென தனிப் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக, பாலக்காட்டில் பெண் ரசிகர்களுக்கென தனிச் சிறப்புக் காட்சியே திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post